சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகம் சார்பில் மொடக்குறிச்சி சின்னியம்பாளையத்தில் பெண்களுக்கான கருத்தரங்கம் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு சிறப்புப் பரிசும், கலந்து கொண்டவர்களுக்கு ஆறுதல் பரிசும் வழங்கப்பட்டு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் ஈரோடு மாநகர் மாவட்ட
செயலாளர் பாலாஜி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். ஈரோடு மாவட்ட மகளிரணி அமைப்பாளர் நீலாவதி தலைமை தாங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் முருகேசன், மாவட்ட துணைச்செயலாளர் மஞ்சு, மொடக்குறிச்சி ஒன்றிய செயலாளர் கௌதம், மொடக்குறிச்சி ஒன்றிய மகளிரணி அமைப்பாளர் தீபா ஆகியோர் கலந்து கொண்டனர்.