நீலகிரி. மார். 09.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் பாஜக சார்பில் கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டது. மும்மொழி கொள்கையின் அவசியம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக ஒருகோடி மக்களிடம் கையெழுத்து பெற இலக்கு ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அக்கட்சியினர் தெரிவித்தனர். கோத்தகிரியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடந்த கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் தர்மன் தலைமை தாங்கினார் மும்மொழி கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக அதிமுக மற்றும் பல கட்சியினர் குரல் எழுப்பி வருகின்றனர். பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை அறிவுறுத்தலின் பேரில் தமிழ், ஆங்கிலம், இந்தி ஆகியவற்றை மும்மொழி கொள்கையாக ஏற்க வேண்டும் என கையெழுத்து இயக்கம் நடந்து வருகிறது. இதன் அடிப்படையில் புதிய கல்விக் கொள்கையின்படி இந்தியை விருப்ப மொழியாக ஏற்க வேண்டும் என தீவிர பிரச்சார பணியை மேற்கொண்டு வருகிறது.கோத்தகிரியில் நடந்த கையெழுத்து இயக்க கூட்டத்திற்கு மாநில விவசாய அணி தலைவர் நாகராஜ் கலந்து கொண்டு இந்திய திருநாட்டிற்காக பாரதப் பிரதமரின் நல திட்டங்களை செயல்படுத்தி வருவதை குறிப்பிட்டார். அவர் பேசும்போது தமிழகத்தில் 2.5 கோடி மக்கள் வேற்று மொழி பேசுபவர்கள் உள்ளனர் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் நடத்துகின்ற பள்ளியில் நான்கு மொழிகள் கற்று தரப்படுவதாக குறிப்பிட்டார். மேலும் பாரத பிரதமர் மோடி அவர்களின் திட்டங்களை எடுத்துரைத்தோடு 13000 பள்ளிகள் மரத்தடியில் இன்றும் இயங்கிக் கொண்டிருப்பதாகவும் குறிப்பிட்டார். தமிழகத்தில் 2. கோடி மக்கள் மாற்று மொழி பேசுவதாக குறிப்பிட்டார். இந்தியாவில் 25 கோடி மக்களை வறுமையில் இருந்து பாரத பிரதமர் மீட்டு உள்ளார் என தனதுரையில் குறிப்பிட்டார். மேலும் 2026இல் பாரதிய ஜனதா கட்சி வலுவான கூட்டணியுடன் ஆட்சி அமைக்கும் எனவும் பாஜகவுடன் பிற கட்சிகள் கூட்டணி சேர விடாமல் தடுக்கும் முயற்சிகளில் திமுக ஈடுபட்டு வருவதாகவும் மும்மொழி கொள்கை குறித்து கையெழுத்து பெரும் இயக்கத்தில் குறைந்தபட்சம் ஒரு கோடி பேரிடம் கையெழுத்து பெற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். பாஜக நீலகிரி மாவட்ட தலைவர் தருமன், பொதுச் செயலாளர் குமார், பரவேஸ் குமார் மற்றும் கட்சியின் மகளிர் அணியினர், இளைஞர் அணியினர் மற்றும் கட்சியின் மாவட்ட , வட்ட பொறுப்பாளர்கள் கையெழுத்து இயக்கத்தில் பங்கேற்றனர்.