திங்கள் சந்தை, மார்- 9
திங்கள்சந்தை அருகே உள்ள பெரியபள்ளியை சேர்ந்தவர் கிளைமன்ட் ராஜன் (69). இவர் சம்பவ தினம் திங்கள்சந்தையில் நடைபெற்ற திருச்செந்தூர் காவடி கட்டு விழாவை பார்க்க ஸ்கூட்டரில் சென்றுள்ளார். அவர் தனது ஸ்கூட்டரை திங்கள்சந்தை அரசு பஸ் டிப்போ முன்புறம் நிறுத்தி வைத்துவிட்டு, நிகழ்ச்சியை பார்க்க சென்றுள்ளார்.
பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது அவர் வைத்த இடத்தில் ஸ்கூட்டரை காணவில்லை. அதை பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. யாரோ மர்ம நபர்கள் ஸ்கூட்டரை திருடி சென்றதாக தெரிகிறது.
இது குறித்து அவர் இரணியல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து ஸ்கூட்டரை திருடி சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர். இதற்காக அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை போலீசார் கைப்பற்றி ஆய்வு செய்து வருகிறார்கள்.