கமுதி அருகே கே.நெடுங்குளம், திருச்சிலுவையாபுரம் s.புதுப்பட்டி உடைகுளம் பெருமா பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கு செல்லும் ரோடு சேதமடைந்து குண்டும்குழியுமாக பல ஆண்டாக இருப்பதால் மக்கள் சிரமப்படுகின்றனர்.
கமுதி அருகே கே.நெடுங்குளம், புதுக்கிராமம், தலைவ நாயக்கன்பட்டி, திருசிலுவையாபுரம் உள்ளிட்ட 8க்கும் மேற்பட்ட கிராமங்களில் ஆயிரத்திற்கும் அதிகமான குடும்பங்கள் வசிக்கின்ற னர். கமுதியிலிருந்து இந்த கிராமங்களுக்கு செல்லும் ரோடு பல ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்டது . முறையான பராமரிப் பின்றி ரோட்டில் ஜல்லிக்கற்கள் முக்கால்வாசி ஆங்காங்கே பெயர்ந்து குண்டும் குழியுமாக சேதமடைந்துள் ளது. மழைக் காலங்களில் பள்ளங்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது.இதனால் இவ்வழியே செல்வதற்கு கிராம மக்கள் அச்சப்படு கின்றனர். இது குறித்து
கே.நெடுங்குளம் பொதுமக்கள் கூறியதாவது: கமுதியில் இருந்து கே.நெடுங்குளம், திருசி லுவைப்புரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்கள் செல்லும் முக்கியமான ரோடு சேதமடைந்து நடப்பதற்கே லாயக்கற்ற தாக மாறி உள்ளது. அவசர நேரத்தில் ஆம்புலன்ஸ் செல்வதற்கு கூட சிரமப்ப டுகின்றனர்.
குறிப்பிட்ட நேரத் தில் பள்ளி, கல்லுாரிக்கு மாணவர்கள் செல்ல முடி யவில்லை. டூவீலரில் செல்பவர்கள் ஒருவித அச்சத்துடன் செல்கின்றனர். பலமுறை புகார் அளித் தும் நடவடிக்கை எடுக் கப்படவில்லை. ஓட்டு கேட்டு வரும் வேட்பாளர் வெற்றி பெற்ற பின் மக் களின் கோரிக்கைகளை நிறைவேற்ற செவி சாய்க் கவில்லை.
எனவே மாவட்டஅதிகா ரிகள் ஆய்வு செய்து புதிய ரோடு அமைக்க வேண் டும் என்று கோரிக்கை விடுத்தனர்.