முதல்வர் பிறந்த தின திருமணம் சீர்வரிசை வழங்கி எம்எல்ஏ ராஜா நடத்தி வைத்தார்/
தென்காசி வடக்கு மாவட்டம் சங்கரன்கோவிலில் திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு க ஸ்டாலின் பிறந்தநாள் முன்னிட்டு நகர திமுக சார்பில் தர்மசீலன் என்ற மணமகனுக்கும், இராமலட்சுமி என்ற மனமகளுக்கும் அனைத்து விதமான சீர்வரிசைகள் வழங்கி திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு நகர செயலாளர் பிரகாஷ் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ கலந்துகொண்டு திருமணத்தை நடத்தி வைத்தார் அதனைத் தொடர்ந்து மணமக்களுக்கு திருவிளக்கு, பாத்திரங்கள், பீரோ, கட்டில், கேஸ்அடுப்பு உள்ளிட்ட குடும்பத்திற்கு தேவையான பல்வேறு பொருட்கள் சீதனமாக வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் நகர அவைதலைவர் முப்பிடாதி, பொதுக்குழு உறுப்பினர் மகேஸ்வரி,மாவட்ட விளையாட்டு அணி துணை அமைப்பாளர் கேபிள் கணேசன், நகர துணை செயலாளர் சுப்புத்தாய், வார்டு செயலாளர் ராமலிங்கம், நகர ஓட்டுனர் அணி அமைப்பாளர் மற்றும் பாக முகவர் சபரிநாத்,தகவல் தொழில்நுட்ப அணி நகர அமைப்பாளர் வேணி , மகளிர் அணி முத்தத்தாள், குருவம்மாள், முன்னாள் வார்டு பிரதிநிதி சேகர் மற்றும் கழக உடன்பிறப்புகள் கலந்து கொண்டனர்.