கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மாணவ, மாணவியர்களுக்கான பொதுத்தேர்வு நடைபெறும் தேர்வு மையத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
கிருஷ்ணகிரி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், 12 ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியர்களுக்கான அரசு பொதுத்தேர்வு நடைபெறும் தேர்வு மையத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் .ச.தினேஷ் குமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 12- வகுப்பு பொது தேர்வு 03.03.2025 முதல் 25.03.2025 வரை நடைபெறவுள்ளது. கிருஷ்ணகிரி கல்வி மாவட்டத்தில், 71 அரசுப்பள்ளிகள், 1 அரசு உதவி பெறும் பள்ளி, 49 மெட்ரிக் பள்ளிகள் என மொத்தம் 121 பள்ளிகளில் பயிலும் 6,342 மாணவர்கள், 6602 மாணவிகள் என மொத்தம் 12,944 மாணவர்களுக்கு 51 தேர்வு மையங்களிலும்,
ஓசூர் கல்வி மாவட்டத்தில் 36 அரசுப்பள்ளிகள், 34 மெட்ரிக் பள்ளிகள் என மொத்தம் 70 பள்ளிகளில் பயிலும் 4,067 மாணவர்கள், 4,938 மாணவிகள் என மொத்தம் 9,005 மாணவர்களுக்கு 36 தேர்வு மையங்கள் என மொத்தம் கிருஷ்ணகிரி மற்றும் ஓசூர் கல்வி மாவட்டங்களில் 191 பள்ளிகளில் பயிலும், 10,409 மாணவர்கள், 11,540 மாணவிகள் என மொத்தம் 21,949 மாணவ, மாணவிகள் மற்றும் 231 மாற்றுதிறன் கொண்ட மாணவர்கள் 87 தேர்வு மையங்களில் தேர்வு நடைபெறுகிறது.
மாணவ மாணவியர்கள் எவ்வித சிரமமின்றி தேர்வு மையங்களுக்கு செல்வதற்கு பேருந்து வசதிகளும், தேர்வு மையங்களில் குடிநீர், மின்சாரம், கழிப்பறை வசதிகள், காவல் துறை பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் தேர்வு மையங்களை கண்காணிக்க 117 பறக்கும் படை அலுவலர்கள், 08 வினாத்தாள் கட்டுக்காப்பாளர்கள், 87 முதன்மை கண்காணிப்பாளர்கள், 87 துறை சார்ந்த அலுவலர்கள், 33 வழித்தட அலுவலர்கள் தேர்வு பணியை கண்காணிக்க நியமிக்கப்பட்டுள்ளார்கள்.பொதுத்தேர்வு எழுதும் மாணவ, மாணவியர்கள் தேர்வு எழுதும்போது தேர்வு குறித்த அச்சம் மற்றும் பதற்றத்தை தவிர்த்து தைரியமுடன் சிறப்பான முறையில் தேர்வுகள் எழுதி வெற்றி பெற வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் .ச.தினேஷ் குமார் தெரிவித்தார்.
இவ்வாய்வின் போது, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் (பொ) .முனிராஜ், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் .சர்தார், மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் .வெங்கடேசன், வட்டாட்சியர் .சுப்பிரமணி, மாவட்ட உடற்கல்வி அலுவலர் .வளர்மதி மற்றும் ஆசிரியர்கள் உடன் இருந்தனர்.