கிருஷ்ணகிரி: மார்ச்:02
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி பேருந்து நிலையம் அருகில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முப்பெரும் விழாவை முன்னிட்டு பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில் அக் கட்சியின் மாநில துணை பொதுச் செயலாளர் வன்னியரசு கலந்துக் கொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர்., தமிழகத்தில் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்கள் தங்களின் அடிப்படை தேவைகளை பெறுவதற்கு கூட போராடி தான் பெற முடிகிறது. இந்த மக்கள் வீட்டுமனை பட்டா., குடிநீர்., சுடுகாடு வசதி., சாலைகள் கேட்டு தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் பல ஆண்டுகளாக போராடி வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிருஷ்ணகிரி., சூளகிரி, வேப்பணப்பள்ளி பகுதிகளில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஆதிதிராவிடர் மக்களின் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வில்லை. நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தியும் போராடியும் வருகின்றோம். மக்களின் தேவைகளுக்காக போராடி வரும் கட்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி. தலித் மக்களின் மீதான தாக்குதலை தடுக்கவும்., அவர்கள் கொடுக்கும் புகாரின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம். அரசியல் களத்தில் அங்கீகாரம் பெற்ற ஒரு கட்சியாக உருவெடுத்தது என்றால் மக்கள் கொடுத்த ஆதரவு தான் காரணம். தொடர்ந்து மக்களின் தேவைகளுக்காக போராடுவோம். மாவட்டங்களில் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்களின் நீண்ட கால கோரிக்கைகளை திமுக அரசு உடனடியாக நிறைவேற்றி தர வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இந்த நிகழ்ச்சியில் இளம் சிறுத்தை எழுச்சி பாசறை மாவட்ட அமைப்பாளர்கள் ஜெய்சங்கர், சிவக்குமார், தொகுதி துணை செயலாளர்கள் கார்த்திக், முரளி, ஒன்றிய செயலாளர் ஆலப்பட்டி ரமேஷ், மாவட்ட அமைப்பாளர் குப்பன், ஒன்றிய பொறுப்பாளர் குமார், ஒன்றிய துணை செயலாளர் சேட்டு, ஒன்றிய செயலாளர் மகளிர் அணி லலிதா, மாவட்ட பொறுப்பாளர் இஸ்லாமியர் பேரவை அன்சர், காவேரிப்பட்டிணம் ஒன்றியம் செயலாளர் புலி என்கிற ராஜேஷ், ஒன்றிய பொறுப்பாளர் பலராமன் ,மகளிர் அணி ஒன்றிய செயலாளர் செல்வி மாதேஷ், வேப்பனப்பள்ளி ஒன்றிய செயலாளர் கிருஷ்ணன் ,சூளகிரி ஒன்றிய செயலாளர் முனியப்பன், உள்ளிட்ட ஏராளமான மகளிர் அணி விடுதலை சிறுத்தைகள் பொறுப்பாளர்கள் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.