மயிலாடுதுறை அருகே தமிழக முதல்வரின் 72 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு சோளம்பேட்டை அருமை இல்லத்தில் ஆதரவற்ற முதியவர்களுக்கு உணவு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க ஸ்டாலின் 72 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் நிவேதா எம் .முருகன் எம்எல்ஏ அறிவுறுத்தலின்படி மயிலாடுதுறை மத்திய ஒன்றிய திமுக சார்பில் மத்திய ஒன்றிய செயலாளர் இமய நாதன் ஏற்பாட்டில் மயிலாடுதுறை அருகே சோளம்பேட்டை அருமை இல்லத்தில் ஆதரவற்ற முதியோர்களுக்கு காலை அறுசுவை உணவு வழங்கி கொண்டாடினர்.
இந்த நிகழ்ச்சியில் திமுக நிர்வாகிகள் ஏராளமானோர் பங்கேற்றனர்.