சாயல்குடி, மே 22
காங்கிரஸ் தலைவரும் முன்னாள் பாரத பிரதமருமான ராஜீவ்காந்தி அவர்கள் தமிழ்நாட்டுக்கு 21.05.1991ல் ஸ்ரீபெரும்புதூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்துக்கு வரும்போது மனித வெடிகுண்டு வெடிக்கச்செய்து தமிழக மண்ணில் ரத்தம் சிந்தி பலியானார்.
மாபெரும் தேசத்தலைவரான ராஜீவ்காந்தி அவர்களின் 33வது நினைவு நாள் அஞ்சலி நிகழ்ச்சி சாயல்குடி அருகேயுள்ள நரிப்பையூரில் நடைபெற்றது. நரிப்பையூர் பேருந்து நிலையத்தில் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்ட அவரது திருஉருவ படத்துக்கு மாவட்ட ஊராட்சிக்குழு துணைச்சேர்மன் மாவீரன் வேலுச்சாமி தலைமையில் மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட சேவா காங்கிரஸ் பிரிவு தலைவர் எஸ்.வி.கணேசன், நரிப்பையூர் வட்டார காங்கிரஸ் தலைவர் ஞானசேகர், மாவட்ட பொதுச்செயலாளர்கள் ஜெயராஜ், மைக்கேல்ராஜ், சாயல்குடி நகர் தலைவர் வி.வி.ஆர்.நகர் காமராஜ் ஆகியோர் கலந்துகொண்டு மலரஞ்சலி செலுத்தினர்.