நாகர்கோவில் – மே – 22,
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே உள்ள குமாரகோவில் முருகன் கோயிலில் தேரோட்டம் நடந்தது. குமாரகோவில் வேளிமலை முருகன் கோயிலில் வைகாசி விசாக திருவிழா கடந்த 13 ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழா நாட்களில் சுவாமியும், அம்பாளும் வீதி உலா வரும் நிகழ்ச்சியும், சிறப்பு பூஜை, அபிஷேகம் நடந்தது. நேற்று காலை தேரோட்டம் குமரி மாவட்ட திருக்கோயில்கள் நிர்வாக அறங்காவலர் குழுத் தலைவர் பிரபா ஜி ராமகிருஷ்ணன் தலைமையில் நடந்தது. சுவாமியும், அம்பாளும் ஒரு தேரிலும், விநாயகர் இன்னொரு தேரிலும், அமர்ந்து வீதி உலா வந்தனர். வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா என்ற கோஷ முழக்கத்தோடு பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். விழாவில் இணை ஆணையாளர் ரத்னவேல் பாண்டியன், மராமத்து பொறியாளர் ஐயப்பன், மேலாளர் மோகனகுமார், சூப்பிரண்டு சண்முகம்பிள்ளை, கழக பொதுக்குழு உறுப்பினர் ஜீவானந்தம், ஒன்றிய செயலாளர் மாஸ்டர் மோகன், மாவட்ட தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் புருஸ்லி, ஒன்றிய இளைஞரணி பிரவின் ராஜ பாண்டியன், அலெக்ஸ் உட்பட பலர் பங்கேற்றனர்.