ஓசூர் வட்டத்திற்குட்பட்ட காரப்பள்ளி, ஏஎஸ்டிசி அட்கோ, ஆவலப்பள்ளி 7 -வது வார்டு ஆகிய பகுதிகளில் “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ், மாவட்ட ஆட்சித்தலைவர் , அவர்கள் இரண்டாவது நாளாக கள மேற்கொண்டார் .
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் வட்டத்திற்குட்பட்ட ஓசூர் பேருந்து நிலையம், காரப்பள்ளி முதலமைச்சரின் காலை உணவு தாயரிக்கும் கூடம், ஏஎஸ்டிசி அட்கோ, ஆவலப்பள்ளி 7 வது வார்டில் நடைபெற்று வரும் பாதாள சாக்கடை திட்ட பணிகள் ஆகியவற்றை “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” என்ற திட்டத்தின் கீழ், மாவட்ட ஆட்சித்தலைவர் .ச.தினேஷ் குமார் ., அவர்கள் இரண்டாவது நாளாக கள ஆய்வு மேற்கொண்டார்.
மாவட்ட ஆட்சித்தலைவர் “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ், 2-வது நாளாக ஓசூர் பேருந்து நிலையத்தில் சுகாதார தூய்மை பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும், காரப்பள்ளி பகுதி, முதலமைச்சரின் காலை உணவு தாயரிக்கும் கூடத்தில், ஓசூர் மாநகராட்சிக்குட்பட்ட 35 பள்ளிகளில் பயிலும் 6,352 மாணவ, மாணவிகளுக்கு முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் கீழ் காலை உணவு வழங்க தயாரிக்கப்பட்ட உணவுகளை சாப்பிட்டு உணவின் தரத்தை ஆய்வு மேற்கொண்டார்.
தொடர்ந்து, ஏஎஸ்டிசி அட்கோ பகுதியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ், குப்பைகளை தரம் பிரித்து நுண்ணுயிர் உரம் செயலாக்கம் மையத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும், ஓசூர் வட்டம், ஆவலப்பள்ளி 7 -வது வார்டில் நடைபெற்று வரும் பாதாள சாக்கடை திட்ட பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும், இத்தெருவில் வீடு வீடாக குப்பைகளை சேகரிக்கும் பணிகளை பார்வையிட்டார்.
முன்னதாக மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் (26.02.2025) அன்று மாலை முதல் ஓசூர் மாநகராட்சி, பத்தலப்பள்ளியில் ரூ.32.95 கோடி மதிப்பில் புதியதாக கட்டப்பட்டு வரும் பேருந்து நிலைய கட்டுமான பணிகளையும், ஓசூர் ராயக்கோட்டை சாலையில் ரூ.100 கோடி மதிப்பில் புதியதாக கட்டப்பட்டு வரும் அரசு தலைமை மருத்துவமனையின் கட்டுமான பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.மேலும், ஜூஜூவாடி போக்குவரத்து சோதனை சாவடி மற்றும் காவல்துறை சோதனை சாவடிகளை பார்வையிட்டு, அப்பகுதிகளில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் பொருட்டு, மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து தேசிய நெடுஞ்சாலைத்துறை, காவல்துறை அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டார்.
அதனைத்தொடர்ந்து, ஓசூர் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக கிடங்கில் இருப்பு வைக்கப்பட்டுள்ள அரிசியின் தரத்தை பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். மேலும், அரசு பிற்படுத்தப்பட்டோர் நல பள்ளி மற்றும் கல்லூரி மாணவர் விடுதியை பார்வையிட்டு, மாணவர்களுக்கு வழங்க சமைக்கப்பட்ட உணவு, குடிநீர் வசதி, கழிப்பறை வசதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை பார்வையிட்டு, கல்வி மற்றும் விடுதிகளில் உள்ள வசதிகள் குறித்து மாணவர்களிடம் கேட்டறிந்தார். மாணவர்கள் தங்களுக்கு புதியதாக சுத்திகரிக்கப்பட்ட இயந்திரம், பழுதடைந்துள்ள மின் விசிறிகளை மாற்றித்தர கோரிக்கை வைத்ததையடுத்து. உடனடியாக, சமூக பொறுப்பு நிதியிலிருந்து புதிய மின் விசிறி, ஆர்ஓ இயந்திரம் அமைத்து தர அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
தொடர்ந்து, ஓசூர் அரசு தலைமை மருத்துவனை அவசர சிகிச்சை மையத்தை பார்வையிட்டு, மருத்துவ உபகரணங்கள், அவசர சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளின் விபரங்கள், அவர்களுக்கு வழங்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.
அதனைத்தொடர்ந்து, ஒசூர் தொழிற்சங்க அலுவலக கூட்டரங்கில், தொழில்முனைவோர் சங்க பிரதிநிதிகளிடம் அடிப்படை வசதிகள் மற்றும் குறைகளை கேட்டறிந்தார்.
இந்த ஆய்வுகளின் போது, ஓசூர் சார் ஆட்சியர் .பிரியங்கா, ., ஒசூர் மாநகராட்சி ஆணையாளர் (கூ.பொ) .பூங்கொடி அருமைக்கண், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக பொறியாளர் .ரவிக்குமார், செயற்பொறியாளர்கள் .வெங்கட்ராஜன், .செந்தில், உதவி செயற்பொறியாளர் .பிரபாகர், நகர் நல அலுவலர் மரு.அஜித்தா, வட்டாட்சியர் .சின்னசாமி, வட்டார வளர்ச்சி அலுவலர் .குமரேசன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.