தருமபுரி கடைவிதியில் அமைந்துள்ள ஸ்ரீ அம்பிகா பரமேஸ்வரி உடனாகிய ஸ்ரீ மருதப
வானீஸ்வரர் திருக்கோவிலில் மகா சிவராத்திரி முன்னிட்டு சிவனுக்கு நான்கு கால பூஜையில் சாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டது. இந்த பூஜையில் சிவன் அடிகளார்கள் மற்றும் பக்தர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டது. தருமபுரி இலக்கியம்பட்டியில் உள்ள பெரியாண்டவர் கோவிலில் மகா சிவராத்திரி முன்னிட்டு சிவனுக்கு நான்கு
கால பூஜைகள் நடைபெற்றது. சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை மற்றும் அலங்காரம் செய்யப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.