கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட முன்னால் காங்கிரஸ் தலைவர் எல். சுப்பிரமணியன் இல்ல நிகழ்ச்சி.
தமிழக காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப் பெருந்ததைக்கு அழைப்பு .
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட முன்னால் காங்கிரஸ் தலைவரும் காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுக்குழு உறுப்பினருமான
எல். சுப்பிரமணியன் அவர்களின் இளைய மகளின் திருமண விழா வருகின்ற மார்ச் மாதம் 12 ம் தேதி காவேரிப்பட்டிணத்தில் உள்ள கே.ஆர்.வி மஹாலில் நடைப்பெற உள்ளது. இந்த திருமண வரவேற்பு விழாவிற்காக தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை அவர்களை சென்னையில் உள்ள அவரது இல்லத்திற்கு சென்ற எல். சுப்பிரமணியன் தனது மகளின் திருமண வரவேற்பு விழாவிற்கு வருகைத்தந்து மணமக்களான
டாக்டர் சோனியா மற்றும் டாக்டர் சரவணநாதன் ஆகியோரை வாழ்த்த வருகைத்தருமாறு
திருமண வரவேற்பு அழைப்பிதழை வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து, முன்னால் மத்திய அமைச்சரும் மெகா டிவி- நிர்வாக இயக்குனருமான கே.வி தங்கபாலு, கடலூர் பாராளுமன்ற உறுப்பினர் விஸ்ணு பிரசாத், மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் சுதா ராமகிஷ்ணன், முன்னால் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசரின் மகனும் அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.டி.ராமசந்திரன், காங்கிரஸ் கட்சியின் விவசாய அணியின் மாநில தலைவர் பவன்குமார், முன்னால் மத்திய அமைச்சர் வாழப்பாடி ராமமூர்த்தியின் மகன்களான ராமசுகுந்தன், ராமகர்ணன் ஆகியோரை நேரில் சந்தித்து தனது மகளின் திருமண வரவேற்பு விழாவிற்கு வருகை தந்து மணமக்களை வாழ்த்த வருகைத் தருமாறு திருமண வரவேற்பு அழைப்பிதழினை கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட முன்னால் தலைவர் எல். சுப்பிரமணியன் அவர்கள் வழங்கினார்.மேலும் இதே போல முன்னால் சட்ட மன்ற உறுப்பினர் பலராமன், மாநில வர்த்தக காங்கிரஸ் கட்சியின் மாநில செயலாளர் இராமசாமி மற்றும் மாநில
நிர்வாகிகளான
அருள் பெத்தையா, செல்வம், தனிகாசலம் மற்றும் காங்கிரஸ் கட்சியை சார்ந்த சார்பு அணிகளை சேர்ந்தவர்களையும் நேரில் சந்தித்த எல் .சுப்பிரமணியன் தனது இளைய மகளின் திருமண வரவேற்பு விழாவில் கலந்துக் கொண்டு மணமக்களை வாழ்த்த வருகைத் தருமாறு திருமண அழைப்பிதழினை வழங்கினார்,
அப்போது மாநில பொது குழு உறுப்பினர் ஜீ.கே முரளி, முன்னாள் AICC உறுப்பினர் முத்துக்குமார், மாவட்ட துணைத் தலைவர் விவேகானந்தன், முன்னாள் மாவட்ட செயலாளர் கோவிந்தன்,AIRB மாவட்ட தலைவர் ராமச்சந்திரன் ஆகியோர் உடனிருந்தனர்.