திண்டுக்கல் மே :22
திண்டுக்கல் மாவட்டம், நேரு யுவகேந்திரா அலுவலகத்தில் ஒய் நியூ மற்றும் அகம் பவுண்டேஷன் இணைந்து கல்வி வழிகாட்டல் மற்றும் ஆலோசனை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு திண்டுக்கல் மற்றும் நீலகிரி மாவட்ட இளையோர் நல அலுவலர் சரண் வி கோபால் முன்னிலை வகித்தார். ஒய் நியூ அறக்கட்டளை செயலாளர் ரம்லாஹமீது தலைமை தாங்கினார். அகம் பவுண்டேஷன் மாநில அமைப்பாளர் பரதன் கலந்து கொண்டு கல்வி வழிகாட்டல் குறித்த ஆலோசனை வழங்கினார்கள். கனரா வங்கி சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிதி ஆலோசகர் சாந்தி கலந்து கொண்டு கல்வி கடன் குறித்து ஆலோசனை வழங்கினார்கள். விழாவில் மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் என 60க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டார்கள். நிகழ்ச்சியை சுப்ரமணியன் சிறப்பாக தொகுத்து வழங்கினார்.
விழாவின் முடிவில் கலந்து கொண்ட அனைவருக்கும் தேநீர் வழங்கப்பட்டது.நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை ஆசிரிய பெருமக்கள் தன்னார்வலர்கள் செய்திருந்தனர்.நிகழ்ச்சியின் முடிவில் கயல்விழி நன்றி கூறினார்.