ஈரோடு மே 22
ஈரோடு மாவட்ட கூட்டரங்கில் தேர்தல் அதிகாரியும் மாவட்ட கலெக்டருமான ராஜகோபால் சுன்கரா தலைமையில் வாக்கு எண்ணும் மையத்தில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடந்தது .
இந்த கூட்டத்தில் கலெக்டர் ராஜகோபால் சுன்கரா பேசியதாவது ஈரோடு நாடாளுமன்ற தொகுதிக்கான தேர்தல் வருகிற 4 ம் தேதி காலை 8 மணிக்கு சித்தோடு அரசினர் பொறியியல் கல்லூரி வளாகத்தில் எண்ணப்பட உள்ளது இதில் வாக்கு எண்ணும் மையத்தில் ஆஜராகும் முகவர்கள் அதற்கான படிவத்தை முறையாக பூர்த்தி செய்து புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையை தேர்தல் நடத்தும் அலுவலர் மூலம் பெறப்பட்டிருக்க வேண்டும் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை இல்லாதவர்கள் வாக்கு எண்ணும் மையத்துக்குள் அனுமதிக்க இயலாது வாக்கு எண்ணும் மைய முகவர்களின் வாகனங்களுக்கு அனுமதி இல்லை வேட்பாளர்கள் வாகனத்தை பயன்படுத்த வேண்டும் எனில் முன்கூட்டியே தேர்வு அதிகாரியிடம் அனுமதி பெற்று வாகன பாஸ் பெறப்பட வேண்டும்
வாக்கு எண்ணும் மையத்துக்குள் 4 ந் தேதி காலை 7:30 மணிக்குள் தவறாது இருக்க வேண்டும் குறிப்பட்ட
நேரத்துக்கு பின்னால் வருபவர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் வாக்கு எண்ணும் அறையில் முகவர்களுக்கு ஒதுக்கப்பட்ட வழியாக சென்று தொடர்புடைய மேஜையின் அருகில் ஒதுக்கப்பட்ட இடத்தில் அமர வேண்டும் முகவர்கள் அவர்களுக்கு ஒதுக்கப்பட மேஜையை தவிர வேறு எங்கும் செல்லக்கூடாது வாக்கு எண்ணும் மையத்தில் வாக்கு எண்ணிக்கை தொடங்குவதற்கு முன்னதாக உதவி தேர்தல் அதிகாரி முன்னிலையில் உறுதிமொழி எடுக்க வேண்டும்
வாக்கு எண்ணிக்கை நடைபெறும் போது முகவர்கள் அமைதியான சூழலில் இருக்க வேண்டும் வீண் விவாதங்கள் கூச்சல் இடுபவர்கள் தகராறு செய்பவர்கள் உடனடியாக வெளியேற்றப்படுவார்கள்
வாக்கு எண்ணும் மையத்தில் அனுமதிக்கப்பட்ட முகவர்கள் செல்போன் எடுத்து வர அனுமதி இல்லை மேலும் புகைபிடித்தல் மது அருந்திவிட்டு வாக்கு எண்ணும் மையத்திற்குள் வருதல் போன்ற செயல்பாடுகள் தடை செய்யப்பட்டுள்ளது மையத்தில் குடிநீர் உணவு கழிப்பறை வசதிகள் செய்யப்பட்டுள்ளது வெளியில் இருந்து உணவுப் பொருட்கள் கொண்டு வர அனுமதி இல்லை வாக்கு எண்ணும் மையத்தில் சட்டம் ஒழுங்கு முறையினை பேணுவதில் முகவர்கள் தேர்தல் நடத்தும் அதிகாரிகளுக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்
இவ்வாறு அவர் கூறினார்
இது தவிர உதவி தேர்தல் அலுவலர்கள் வாக்கு எண்ணும் மையத்தில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும் அறிவுரைகள் வழங்கப்பட்டன
இந்த கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் மாநகராட்சி ஆணையாளர் சிவ கிருஷ்ண மூர்த்தி மாவட்ட வருவாய் அதிகாரி சாந்தகுமார் ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்)ரகுநாதன் மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.