மதுரை மே 21
மதுரை மல்லிப்பூ இட்லிக்கு பெயர் பெற்ற மாமதுரையில் மாறாத சுவைக்கு உத்திரவாதமளிக்கும் மதுரம் பிராண்ட் அரிசி மற்றும் உளுந்து அறிமுகம் செய்த பின்னர் பிராண்ட்ஸ் நெக்ஸ்ட்ன் தலைமை செயலாக்க அலுவலர் B.P.ரவீந்திரன் இது தொடர்பாக தெரிவிக்கையில் அரிசி தென்னிந்திய மக்களின் அன்றாட வாழ்வின் அங்கமாக உள்ள ஓர் முக்கிய தானியம் ஆகும் தென்னிந்திய மக்களின் கலாச்சார சின்னமாகவும் செழிப்பினுடைய அடையாளமாகவும் அரிசி கருதப்படுகிறது.
இவ்வாறு கருதப்படும் அரிசியினை மக்களுக்கு சுவை மாறாமல் நிறைந்த தரத்தோடு கொடுக்கும் பொருட்டு மதுரம் பிராண்ட் பொன்னி புழுங்கல் அரிசி ராஜபோகம் அரிசி இட்லி அரிசி மற்றும் உளுந்து வகைகளை வேகூல் நிறுவனம் தனது துணை நிறுவனமான பிராண்ட்ஸ்நெக்ஸ்ட் மூலமாக தற்போது தூங்காநகரமான மதுரையில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தி உள்ளது.
மேலும் பழமை மாறாத பண்பாடு கலாச்சாரம் மற்றும் திருவிழாக்களின் தலைநகரமாக இருக்கும் மதுரை மக்களின் விருந்தோம்பலுக்கு பெயர் பெற்ற மதுரையில் தரத்திற்கு உத்திரவாதம் அளிக்கும் மதுரம் பிராண்ட் அரிசியை அறிமுகப்படுத்துவதில் பெருமை கொள்கிறோம்
மேலும் இந்நிறுவனம் மதுரம் பிராண்ட் அரிசியின் தனித் தன்மைகளானவை – கனிசமான உபரி நறுமணம் ஊட்டச்சத்து மற்றம் ஒன்றோடு ஒன்று ஒட்டாத மெல்லிய அரிசியின் தன்மை இந்த அரிசி வகை அன்றாட சமையல் மற்றும் கலவைசாதம் (வெரைட்டி ரைஸ்) செய்வதற்கு உகந்ததாகும் மதுரம் பிராண்ட் அரிசி மற்றும் உளுந்து வகைகள் தற்போது மதுரையில் உள்ள அனைத்து முன்னணி சூப்பர்மார்க்கெட்டுகள், பலசரக்கு கடைகள், அரிசி மண்டிகள் ஆகியவற்றில் அரிசி 5 கிலோ, 10 கிலோ மற்றும் 26 கிலோ பேக்குகளில் இப்போது கிடைக்கின்றது என்று தெரிவித்துள்ளார்.