சென்னை, அனகாபுத்தூர் அருள்மிகு ஸ்ரீ ஆனந்தவல்லி சமேத அகத்தீஸ்வரர் வகையறா பச்சை அம்மன் மன்னார் சாமி ஆலய கும்பாபிஷேக விழா
சென்னை, அனகாபுத்தூர் அருள்மிகு ஸ்ரீ ஆனந்தவல்லி சமேத அகத்தீஸ்வரர் வகையறா ஆலயங்களுக்கு உட்பட அருள்மிகு ஸ்ரீ பச்சை அம்மன் மன்னார் சாமி ஆலய கும்பாபிஷேக விழா அருள்மிகு பச்சை அம்மன் மன்னார் ம.கந்தன் (எ) ஆச்சி சுவாமிகள் முன்னிலையில் நடைபெற்றது.
கும்பாபிஷேக விழாவினைத் தொடர்ந்து பக்தர்கள் மீது புனித தீர்த்தம் தெளித்தல், அதனைத் தொடர்ந்து சுவாமிக்கு தீபாராதனை, மகா அபிஷேகம், செய்யப்பட்டது தரிசனம் காண வருகை புரிந்த பக்தர்களுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக அம்மன் திருவீதி உலாவும் நடைபெற்றது.
முன்னதாக, கும்பாபிஷேக விழாவினை அடுத்து, அனகாபுத்தூர், அருள்மிகு ஆலவட்டம்மன் திருக்கோவிலில் பக்தர்கள் பொங்கல் வைப்பதற்காக புதிதாக கட்டப்பட்டுள்ள கோவில் மண்டபம் திறப்பு விழா நடைபெற்றது.
மேற்கண்ட நிகழ்வுகளில் தமிழ்நாடு அரசு சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், பல்லாவரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதி, தாம்பரம் மாநகராட்சி மேயர் க.வசந்தகுமாரி, துணை மேயர் கோ.காமராஜ், பம்மல் வடக்கு பகுதி கழக செயலாளர் த.ஜெயக்குமார், தாம்பரம் மாநகர இளைஞரணி துணை அமைப்பாளர் மற்றும் பம்மல் வடக்கு பகுதி பொருளாளர் பிரபு ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர். விழாவில் பாதுகாப்பு பணியினை பல்லாவரம் காவல் உதவி ஆணையர் வெங்கட் குமார் தலைமையில் காவல்துறையினர் மேற்கொண்டிருந்தனர்.
கும்பாபிஷேக ஏற்பாடுகளை ஆலய செயல் அலுவலர் கா.திருமலை குமார் மேற்பார்வையில், தாம்பரம் 1வது வார்டு மாமன்ற உறுப்பினர் கலைவாணி பிரபு, 3 வது வார்டு மாமன்ற உறுப்பினர் வாணி ஸ்ரீ விஜயகுமார் மற்றும் திருப்பணி குழுவினர், ஊர் பொதுமக்கள் சிறப்பாக செய்திருந்தனர்.