ஊட்டி. பிப்.25.
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் வானிலை ஆராய்ச்சி மையம் இயங்கி வருகிறது. வருகிற 28ஆம் தேதி நடக்கும் தேசிய அறிவியல் தின நிகழ்ச்சியில் கலந்து கொள்ள நீலகிரி மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தேசிய அறிவியல் தினம் ஆண்டுதோறும் பிப்ரவரி மாதம் 28ஆம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது இந்நிலையில் தேசிய அறிவியல் தினம் ராமன் விளைவு கண்டுபிடிப்புக்கு சர். சி. வி. ராமன் அவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டதை கௌரவிக்கும் விதத்தில் கொண்டாடப்படுகிறது. ஊட்டி அருகே உள்ள முத்தோரை கிராமத்துக்கு அருகில் அமைந்துள்ளது ரேடியோ வானிலை ஆய்வு மையம் இந்த ஆண்டிற்கான தேசிய அறிவியல் தின நிகழ்ச்சிகளை பிப்ரவரி 28ஆம் தேதி நடத்த ஏற்பாடு செய்துள்ளது. குறிப்பாக ஆர் ஏ சி மையம் உலகில் உள்ள மிகப்பெரிய ரேடியோ தொலைநோக்கிகளில் ஒன்றான ஊட்டி ரேடியோ தொலைநோக்கியை இயக்கி வருகிறது.
வானிலை ஆய்வு மைய தொலைநோக்கி முக்கிய ஆராய்ச்சிகளுக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆர் ஏ சி தேசிய அறிவியல் தின ஏற்பாட்டின் முக்கிய நோக்கம் மாணவர்களிடையே அறிவியல் ஆர்வத்தை உருவாக்கவும் மற்றும் ஊக்கப்படுத்துவதும் முக்கிய நோக்கமாகும். மக்களிடையே அறிவியல் விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் இன்றைய அவசிய தேவையாகும். வரும் 28ஆம் தேதி ஆர் ஏசி யில் நடக்கும் நிகழ்ச்சியில் அனைவரும் கலந்து கொள்ளலாம் அன்றைய தினம் ஊட்டி ரேடியோ தொலைநோக்கி கொண்டு நட்சத்திர ஆய்வு, சூரியனையும் சூரிய புள்ளிகளையும் ஆராய்ந்து ஊட்டி ரேடியோ தொலைநோக்கியின் எந்திரவியல் மின்னியல் மற்றும் மின்னணுவியல் அமைப்புகளின் விளக்கம் தற்போதைய விஞ்ஞான நிறுவனங்களின் காட்சிக்கூடங்கள் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகளின் விஞ்ஞான மாதிரிகள் மற்றும் பல நிகழ்வுகள் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அன்றைய அனைத்து நிகழ்ச்சிகளையும் காலை 9. மணி முதல் மாலை 5. மணிவரை காண பள்ளி மாணவ மாணவியர்கள் மற்றும் பொது மக்களும் கலந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.