திண்டுக்கல்லில் திமுக கிழக்கு பகுதி செயற்குழு கூட்டம் பகுதி செயலாளர் A.இராஜேந்திரகுமார் தலைமையில் நடைபெற்றது.
திண்டுக்கல் கிழக்கு பகுதி கழக செயற்குழு கூட்ட நிகழ்ச்சி கிழக்கு பகுதி திமுக அலுவலகத்தில் பகுதி செயலாளர் A.இராஜேந்திரகுமார் தலைமையில் நடைபெற்றது.பகுதி நிர்வாகிகள் மூர்த்தி, தமிழ்செல்வன், நாகராஜ், கிருஷ்ணவேணி,பாண்டிதுரை, சபரி, முத்து வட்ட கழக செயலாளர்கள் பிரபு, பொன்ராம், அங்குமணி, நமச்சிவாயம், ஷேக்பரீத், தர்மராஜ், ஜான்கென்னடி, சங்கர், சுப்புராஜ், விஜயகுமார், முகமதுரபீக், சிவா, பிரேம் மற்றும் மாநகர தொண்டரணி அமைப்பாளர் மின்னல்ஜாஹிர், துணை அமைப்பாளர் சண்முகம், விவசாய தொண்டரணி துணை அமைப்பாளர் கண்ணன்,ஆட்டோ
கருப்பையா ஆகியோர் கலந்து கொண்டனர். மார்ச்-1,ம் தேதி தமிழக முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாளில் நலத்திட்ட உதவிகள் வழங்குவது எனவும், முதல்வர் அவர்களின் சாதனைகளை விளக்கி தெருமுனை கூட்டம் நடத்துவது எனவும், வாக்கு சாவடி முகவர்களை கொண்டு 4-வார்டுகளுக்கென 3-கூட்டங்களை நடத்துவது எனவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.