இந்தித் திணிப்பு எதிர்ப்ப விழிப்புணர்வு நிகழ்ச்சி எம்.எல்.ஏ. ராஜா அறிக்கை
தென்காசி வடக்கு மாவட்டச் செயலாளர் ராஜா எம்எல்ஏ விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
தென்காசி வடக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட மாநில ,மாவட்ட கழக நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூர்,கிளை கழக நிர்வாகிகள், கழக தோழர்கள் அனைவருக்கும் இந்தி த
திணிப்பை எதிர்க்கும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்த வேண்டும் எனவும்,
ஓன்றிய அரசு மும்மொழிக் கொள்கையை ஏற்றால்தான் பள்ளிக்கல்வித் துறைக்கு வழங்க வேண்டிய தொகையை வழங்குவோம் என்று மிரட்டி, நம் மாநிலத்திற்கு தர வேண்டிய நிதியை முழுமையாக நிறுத்தி வைத்திருக்கிறது. இந்தித் திணிப்பை ஒரு போதும் ஏற்க மாட்டோம்’ என்று கழகத்தலைவர் முதல்வர் முக ஸ்டாலின் கடுமையாக எதிர்த்து வருகிறார். இந்தித் திணிப்பை ஒன்றிய அரசு மேற்கொள்ளும் போதெல்லாம் தமிழ்நாடு ஒன்றிணைந்து எதிர்த்து வந்திருக்கிறது.
அதன் தொடர்ச்சியாக, திமுக தலைவர், முதலமைச்சர் முக ஸ்டாலின் உத்தரவின் படி, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி தற்போதைய இந்தித் திணிப்பு நடவடிக்கைகளை எடுத்துக் கூறி மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும், தமிழ் நாட்டின் வலுவான எதிர்ப்பை தெரிவிக்கும் வகையிலும் அடுத்த ஒரு வாரத்திற்கு,நமது மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் ஒருவாரத்திற்கு தொடர்ச்சியாக இல்லங்களின் முன்பாக ‘இந்தித் திணிப்பை எதிர்ப்போம்’ என்ற வாசகத்துடன் கோலமிட வேண்டும் எனவும்,
பேருந்து நிறுத்தங்கள், ஆட்டோ நிறுத்தங்களில்
“இந்தித் திணிப்பை நிறுத்து” என்ற பதாகைகளை அமைக்க வேண்டும் எனவும்,
எளிய வாசகங்களுடன்
துண்டு பிரசுரங்கள் அடித்து வீடு வீடாக வழங்கலாம் எனவும்,
பிப்ரவரி 28 ஆம் தேதி வரையிலும் இத்தகைய எளிமையான செயல்பாடுகள் மூலம் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு, அதன் படங்கள் மற்றும் – வீடியோக்களை தென்காசி வடக்கு மாவட்ட கழக அலுவலகத்திற்கும்.
9042762298 என்ற மாநில தலைமை கழக எண்ணுக்கும் அனுப்பி வைக்க வேண்டும் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.