பெருகோபனபள்ளியில் த.வெ.க ஒன்றிய அலுவலகம் திறப்பு விழா . கிழக்கு மாவட்ட செயலாளர் முரளிதரன் திறந்து வைத்தார்.
பர்கூர் ஒன்றியம் பெருகோபனபள்ளி கிராமத்தில் தமிழக வெற்றிக் கழகம் அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது,
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம் பர்கூர் ஒன்றியம் பெருகோபனப்பள்ளி ஊராட்சியில் தமிழக வெற்றிக் கழக ஒன்றிய அலுவலக திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடந்தது. இவ்விழா சுரேஷ் கார்த்திக், மஞ்சுநாத், மனோஜ், சுரேஷ், அருண், வெங்கடேஷ் ஆகியோர் முன்னிலையில், கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளர் முரளிதரன் கலந்து கொண்டு அலுவலகத்தை திறந்து வைத்து,
பள்ளி மாணவர்கள் 500 பேருக்கு நோட்டு,பேனா,பென்சில் உள்ளிட்ட கல்வி உபகரணங்கள் வழங்கினார், அதனைத்தொடர்ந்து 500 பேருக்கு மரக்கன்றுகளும், 2000 பேருக்கு அசைவ உணவும் வழங்கப்பட்டது. இதில் தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.