சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் ஒன்றியம் அஞ்சூர் நாடு பூவந்தியில் சுற்றுவட்டார கிராம விவசாயிகள் பயன்பெறும் வகையில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை திருப்புவனம் பேரூராட்சி தலைவரும் மாவட்ட திமுக துணைச்செயலாளருமான த. சேங்கை மாறன் கலந்து கொண்டு திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட விவசாய அணி துணைத்தலைவர் சொக்கனாதிருப்பு டி. ஆர். சேகர் , மாவட்ட தொழிலாளரணி துணை அமைப்பாளர் பூவந்தி மணிகண்டன், மீனவரணி அண்ணாமலை, ஆட்டோ மாரி, முத்தையா, இளங்கோவன், பொறியாளர் கண்ணன், செட்டி அம்பலம் மற்றும் அரசு அலுவலர்கள் விவசாயிகங ஏராளமானோர் கலந்து கொண்டனர்.