திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே உள்ள ராஜராஜேஸ்வரி கோவில் வளாகத்தில் திருப்பணிகள் நடைபெற்று வரும் நிலையில் அங்கு கம்பி கட்டும் வேலை பார்த்த கட்டுமான தொழிலாளி லோகநாதன் எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி உயிரிழப்பு!!-
_______
அவிநாசி பிப்:21
உதவித்தொகை வழங்க வேண்டும் என கோரி உடலை வாங்க மறுத்து அவிநாசி அரசு மருத்துவமனையில் உறவினர்கள் காத்திருப்பு போராட்டம். திருமுருகன்பூண்டி போலீசார் நடத்திய பேச்சு வார்த்தையில் அனைவரும் கலந்து சென்றனர்.
திருப்பூர் மாவட்டம் அவிநாசி அடுத்த திருமுருகன்பூண்டி நகராட்சிக்கு உட்பட்ட பகுதியான ராக்கியபாளையம் ராஜராஜேஸ்வரி திருக்கோவிலில் திருப்பணிகள் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் திருச்சியை அடுத்த துறையூர் சேர்ந்த மாயகருப்பன் மகன் லோகநாதன் 35 இவர் கடந்த எட்டு வருடங்களுக்கு முன்பு திருப்பூர் அனுப்பர்பாளையம் பகுதியைச் சேர்ந்த பெண்ணை காதலித்து திருமணம் செய்து இரண்டு குழந்தைகளுடன் அனுப்பர்பாளையத்தில் குடியிருந்து வருகிறார். வழக்கம்போல் காலை பணிக்கு சென்ற லோகநாதன் கம்பியை கட்டிங் செய்யும் மிஷினை ஆன் செய்தபோது மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார்.
தற்போது அவிநாசி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை முடிந்த நிலையில் இறந்தவருக்கு இரண்டு குழந்தை என்பதால் கோவில் கமிட்டி சார்பில் குடும்பத்திற்கு நிவாரண நிதி கேட்டு உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருமுருகன் பூண்டி காவல்துறையினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். லோகநாதன் உடலை வாங்க மறுத்து லோகநாதன் உறவினர்கள்
காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட அவரின் குடும்பத்தார்கள் உறவினர்கள் பேச்சுவார்த்தையில் உடன்பட்டு அனைவரும் உடலை வாங்கிக் கொண்டு கலைந்து சென்றனர்.