மார்த்தாண்டம், பிப்- 19
குழித்துறை அருகே குருமாத்தூர் பகுதியை சேர்ந்தவர் தாஸ் (72) சம்பவ தினம் அந்த பகுதியில் உள்ள குளத்தில் குளிப்பதற்காக பைக்கில் புறப்பட்டு சென்று கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த லிட்டின் (21) சிபு (21) ஷாஜி (19) ஆகியோர் ஒரே பைக்கில் வந்து கொண்டிருந்தனர்.
இந்த நிலையில் அவர்கள் திடீரென்று தாசை வழிமறித்து தகராறில் ஈடுபட்டனர். இதில் தாசுக்கும் லிட்டின் தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த லிட்டின் கையில் வைத்திருந்த பாட்டிலை எடுத்து தாஸின் தலையில் ஓங்கி குத்தினார்.உடன் வந்த சிபு, ஷாஜி ஆகியோர் சேர்ந்த தாசை கீழே தள்ளி சரமாரியாக உதைத்ததாக கூறப்படுகிறது.
இந்த தாக்குதலில் தாஸ் காயமடைந்தார். இது குறித்த புகாரின் பேரில் லிட்டின், சிபு, ஷாஜி மீது மார்த்தாண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.