மார்த்தாண்டம், ஜன.18
மார்த்தாண்டம் காவல் நிலையத்துக்கு உட்பட்ட கொடுங்குளம் பகுதியை சேர்ந்தவர் ஜஸ்டின் (35 ) .இவர் லோடுமேன் ஆக பணிபுரிந்து வருகிறார் .இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சஜின் (25) என்ற கொத்தனாருக்கும் முன் விரோதம் இருந்து வந்துள்ளது .இதை அடுத்து நேற்று ஜஸ்டினிடம் சஜின் தகராறில் ஈடுபட்டு தாக்கி உள்ளார். மேலும் ஆபாசமாக பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
இதில் ஜஸ்டின் படுகாயம் அடைந்துள்ளார். இதை அடுத்து அவர் மார்த்தாண்டத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து மாத்தாண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து சஜினை தேடி வருகின்றனர்.