நித்திரவிளை , பிப்- 16
நித்திரவிளை இன்ஸ்பெக்டர் அந்தோணியம்மாள் மற்றும் போலீசார் நேற்று இரவு 9 மணி அளவில் கிராத்தூர் பகுதியில் வாகன சோதனை ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியே பயணிகள் ஆட்டோ ஒன்று கேரளா நோக்கி சென்று கொண்டிருந்தது. போலீசார் ஆட்டோவை தடுத்து நிறுத்தி சோதனை செய்தபோது, அதில் 50 கிலோ எடை உள்ள ஆறு மூடைகளில் 300 கிலோ ரேஷன் அரிசி இருந்தது கண்டறியப்பட்டது. போலீசார் ஆட்டோவையும் ஆட்டோ ஓட்டி வந்த சின்னத்துறை, ஜூட்ஸ் காலனி பகுதி சேர்ந்த டென்னிஸ்டன் (59) என்பவரை நித்திரவிளை காவல் நிலையம் கொண்டு வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.