தஞ்சாவூர் பிப் 15.
தஞ்சாவூர் தமிழ் பல்கலைக் கழகத்தில் தமிழ் மரபு கலையை சமூதாயத்துக்கு எடுத்துச் செல்வதற்காக பல்கலைக் கழகத்தின் தமிழ் பண்பாட்டு மையமும் தஞ்சாவூர் வேல் அமிர்தமும் சமுதாய கல்லூரி நிறுவனமும் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டன..
இந்த ஒப்பந்தத்தில் தமிழ் பல்கலைகழகப் பதிவாளர் பொறுப்பு பன்னீர்செல்வம் தஞ்சாவூர் வேல் அமிர்தம் சமுதாய கல்லூரி நிறுவன சிவகுமார், இயக்குனர் சியாமளா கையொப்ப மிட்டு ஒப்பந்த ஆவணங்களை பரிமாறிக் கொண்டனர்.
இந்த ஒப்பந்தத்தின் மூலம் தமிழ் பண்பாட்டு மையத்தின் மூலமாக நடத்தப்படும். குரலிசை, கருவியிசை, பரதநாட்டியம் நாட்டுப்புற கலைகள் சிலம்பாட்டம் ஆகிய பாடப்பிரிவுகள் தஞ்சாவூர் வேல் அமிர்தம் சமுதாய கல்லூரி மூலமாக நடத்தப்பட்டு, தமிழ்ப் பல்கலைக்கழகம் வழி தேர்வுகள் நடத்தவும் சான்றிதழ் வழங்கவும் வகை செய்யப்படும் என்றார் பன்னீர்செல்வம்
இந்நிகழ்ச்சியில் தமிழ் பண்பாட்டு மைய இயக்குனர் கற்பகம் ,உதவியாளர்கள் ராஜேந்திரன் கார்த்திகேயன், சித்ரா இளநிலை உதவியாளர் பூங் குன்றன் உள்ளிட்ட கலந்து கொண்டனர்.