மார்த்தாண்டம், பிப்- 15
மார்த்தாண்டம் பகுதியில் நேற்று அதிகாலை சுமார் மூன்று மணி அளவில் பாலத்தின் கீழ்பகுதி வழியாக குலசேகரம் ரோடு சந்திப்பு பகுதியில்
தூதூத்துக்குடியில் இருந்து சர்க்கரை ஏற்றிக்கொண்டு கேரளாவுக்கு லாரி சென்று கொண்டிருந்தது. லாரியை அருமனை பகுதியை சேர்ந்த கிறிஸ்டோபர் ( 52) என்பவர் ஓட்டி சென்றார். திடீரென லாரியில் பிரேக் பிடிக்கவில்லை. இதனால் அந்த லாரி நிலை தடுமாறி முன்னால் சிமெண்ட் லோடு ஏற்றி சென்று கொண்டிருந்த மற்றொரு லாரி மீது பயங்கரமாக மோதியது.
மோதிய வேகத்தில் சாலையோரம் இருந்த மின் மாற்றி மற்றும் பெட்டி கடைகளை இடித்துக் கொண்டு லாரி நின்றது. இந்த விபத்தில் சர்க்கரை ஏற்றி சென்ற லாரி டிரைவர் கிறிஸ்டோபர் காலில் முறிவு ஏற்பட்டது. சிமெண்ட் லோடு லாரி டிரைவரும் காயமடைந்தார்.
இருவர் மீட்கப்பட்டு அருகில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். இதில் சர்க்கரை லோடு ஏற்றி சென்ற லாரி முன்புறம் அப்பளம் போல் நொறுங்கியது. தகவல் அறிந்த மார்த்தாண்டம் போலீசார் வந்து போக்குவரத்தை திருப்பி விட்டனர். பின்னர் லாரிகளில் இருந்த லோடு மாற்றப்பட்டு, கிரேன் வரவழைக்கப்பட்டு லாரிகள் அப்புறப்படுத்தப்பட்டன. இதனால் பல மணி நேரம் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.