கொல்லங்கோடு, பிப்- 15-
கொல்லங்கோடு அருகே வள்ளவிளை பகுதியில் தமிழக பதிவு கொண்ட பயணிகள் ஆட்டோவில் அதிகமான மாணவ மாணவிகளை ஏற்றி சென்றது குறித்து செய்திகள் வெளியானது. இது போன்ற சம்பவங்கள் மீனவ கிராமங்களில் வாடிக்கையாக நடந்து வருவதாகவும், உயிர் ஆபத்தை ஏற்படுத்தும் விதமாக உள்ளது என்றும், இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் புகார் கூறியிருந்தனர்.
இது சம்பந்தமான நடவடிக்கை மாவட்ட எஸ் பி ஸ்டாலின் கொல்லங்கோடு போலீசுக்கு உத்தரவிட்டார். கொல்லங்கோடு போலீசார் சம்பந்தப்பட்ட ஆட்டோவை நேற்று வள்ள விளை பகுதியில் உள்ள ஆட்டோ ஸ்டாண்டில் வைத்து பறிமுதல் செய்தனர். மேலும் ஆட்டோவின் சான்றிதழ் மற்றும் ஆட்டோ டிரைவரின் உரிமம் ஆகியவற்றை கைப்பற்றி நடவடிக்கை மேற்கொள்ள மார்த்தாண்டம் வட்டார போக்குவரத்து அதிகாரிக்கு பரிந்துரை செய்தனர்.