தேனி, பிப்.12 –
தேனி மாவட்டம்
ஓய்வூதியர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 20.03.2025 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற உள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல்
தேனி மாவட்டத்தில் தமிழ்நாடு அரசுப்பணியிலிருந்து ஓய்வு பெற்ற அரசு பணியாளர்கள் நிலுவையிலுள்ள ஓய்வூதியப் பலன்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுவது தொடர்பான குறைகளை பரிசீலனை செய்யும் பொருட்டு, ஓய்வு பெற்ற அரசு அலுவலர்கள் மற்றும் அனைத்து ஓய்வு பெற்ற அரசு அலுவலர் சங்க நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொள்ளும் ‘ஓய்வூதியர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையிலும், சென்னை கருவூல மற்றும் கணக்கு துறையின் கூடுதல் இயக்குநர்(பென்சன்) மற்றும் தேனி மாவட்ட கருவூலஅலுவலர் முன்னிலையிலும் 20.03.2025 வியாழக்கிழமை அன்று காலை 10.30 மணியளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலக புதிய கூட்ட அரங்கில் நடைபெறவுள்ளது.
எனவே, தேனி மாவட்டத்தில் உள்ள ஓய்வூதியதாரர்கள் மற்றும் ஓய்வூதிய சங்கங்கள் தங்களது கோரிக்கை தொடர்பான மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், தேனி என்ற முகவரிக்கு 10.03.2025 -க்குள் அனுப்பி வைக்கலாம்.
தேனி மாவட்டத்தில் கோரிக்கை நிலுவை உள்ள அனைத்து ஓய்வூதியதாரர்கள் மற்றும் ஓய்வூதிய சங்க நிர்வாகிகள் ஓய்வூதியர் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஆர்.வி.ஷஜீவனா, இ.ஆ.ப., தெரிவித்துள்ளார்.
வெளியீடு : செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம், தேனி.