கன்னியாகுமரி பிப் 12
அஞ்சுகிராமம் பேரூராட்சிக்கு உட்பட்ட காணிமடம் ஏழாவது வார்டு யாதவர் தெருவில் சாலை மிகவும் மோசமான நிலையில் குண்டும் குழியுமாக காணப்பட்டது.
இது குறித்து கவுன்சிலர் இராஜ பாண்டியன் சாலை சீரமைக்க வேண்டி பேரூராட்சி மன்ற தலைவர் ஜானகி இளங்கோ செயல் அலுவலர் உஷா கிரேசி ஆகியோரிடம் கோரிக்கை விடுத்து இருந்தார்.
அவரது கோரிக்கையை ஏற்று பேரூராட்சி நிர்வாகம் பொது நிதியிலிருந்து ரூபாய் 9.94 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டது.
பணி தொடக்க நிகழ்ச்சிக்கு கவுன்சிலர் இராஜபாண்டியன் தலைமை தாங்கினார். பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் காந்திராஜ் முன்னிலை வகித்தார்.
சிறப்பு விருந்தினராக பேரூராட்சி மன்ற தலைவர் ஜானகி இளங்கோ கலந்து கொண்டு அலங்கார தரை ஓடுகள் பதிக்கும் பணியினை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் அரசு ஒப்பந்ததாரர் சஞ்சய்சாந்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.