ஊட்டி் பிப். 11.
உதகை ஆட.சியர் கூட்ட அரங்கில் எரிவாயு பயன்பாடு, மற்றும் குறைதீர் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன் தலைமை தாங்கினார்.
மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை அலுவலர் ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தார்.
கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய பொது செயலாளர் சிவசுப்பிரமணியம், குன்னூர் நுகர்வோர் பாதுகாப்பு சங்க தலைவர் மனோகரன், கோத்தகிரி புளுமவுண்டன் நுகர்வோர் பாதுகாப்பு சங்க தலைவர் வாசுதேவன், செயலாளர் முகமது சலீம், கோத்தகிரி நுகர்வோர் பாதுகாப்பு சங்க செயலாளர் பாலகிருஷ்ணன், உதகை நுகர்வோர் பாதுகாப்பு சங்க தலைவர் அமீர்கான் ஆகியோர் நுகர்வோர் சார்ந்த குறைகளை சுட்டி காட்டி பேசும்போது
எரிவாயு கூட்டங்கள் வட்ட அளவில் தொடர்ந்து நடத்த வேண்டும். எரிவாயு சிலிண்டர்கள் வீடுகளில் விநியோகம் செய்வதை உறுதிப்படுத்த வேண்டும். சாலைகளில் இறக்கி வைக்கப்படும் சிலிண்டர்கள், அல்லது சில இடங்களில் மொத்தமாக இறக்கி வைப்பது போன்றவை முறைகேட்டிற்கு வழிவகுக்கும் இவற்றை தவிர்க்க வேண்டும். கூடுதல் கட்டணம் வசூலிப்பதை தடுக்க வேண்டும். நுகர்வோர் விருப்பத்திற்கு ஏற்ப முகவர்கள் மாற்றி கொள்ள காலதாமதம் செய்யாமல் மாற்றி கொடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.
இதற்கு பதில் அளித்த மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன் பேசும்போது நுகர்வோர் குறைகளை களையும் வகையில் அனைத்து வட்டங்களிலும் எரிவாயு முகவர்களுடன் எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டங்கள் நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க செய்ய வேண்டும். சாலையோரங்கள் மற்றும் சில இடங்களில் மொத்தமாக சிலிண்டர்கள் இறக்கி வைப்பது முற்றிலும் தவறு. இறக்கி வைப்பதை பார்த்தால் சம்பந்தபட்ட எரிவாயு முகவர்கள் எதிர் தரப்பினராக சேர்க்கபடும். அதிகபட்ச அபராதம் விதிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். நுகர்வோர் சார்ந்து புகார்கள் இருப்பின் எரிவாயு விநியோகஸ்தர்கள் விரைவான முறையில் சரி செய்து தர வேண்டும். இணையம் மூலம் பதிவு செய்தவர்களுக்கு முறையாக விநியோகம் செய்வதை உறுதிபடுத்தி கொள்ள வேண்டும். எரிவாயு வாடிக்கையாளர்கள் விண்ணப்பம் கொடுத்தால் விரைவில் முகவர்கள் மாற்றிக் கொடுக்க வேண்டும். அடுத்த முறை கூட்டத்தில் எரிவாயு நிறுவன மேலாளர்கள் மற்றும் 20 எரிவாயு நிலையம் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும் என்றார் கூட்டத்தின் உரிமைப் பொருள் தனி வட்டாட்சியர்கள் கிருஷ்ணமூர்த்தி, மகேஸ்வரி, வட்ட வழங்கல் அலுவலர்கள்
மற்றும் எரிவாயு முகவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.