ஊட்டி. பிப். 11.
கோத்தகிரி பகுதியில் இருந்து இரவு நேரத்தில் 20 க்கும் மேற்பட்ட லாரிகளில் சில்வர் ஓக் மரங்கள் கடத்தப்படுவதாக அடிக்கடி மாவட்ட வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் கோத்தகிரி கட்டப்பட்டு குடுமனை பகுதியில் இருந்து மரங்கள் ஏற்றி சென்ற லாரி ஒன்று தலை குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் அதிர்ஷ்டவசமாக லாரி ஓட்டுனர் உயிர் தப்பினார். தலை குப்புற விழுந்த லாரியி லிருந்து மரங்கள் ஆங்காங்கே சிதைந்து கிடந்தன. சாலையில் விழுந்த மரங்களையும் லாரியையும் கிரேன் உதவியுடன் மீட்க முயற்சிகள் நடைபெற்ற போதும். விபத்து குறித்த தகவல் அறிந்த வனத்துறையினர் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர் விபத்துக்குள்ளான லாரி மரங்கள் எடுத்துச் செல்ல அனுமதி பெறாமல் கொண்டு செல்லப்படுகிறதா என வனத்துறையின விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். லாரி விபத்து தொடர்பாக சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருவதோடு கட்டப்பட்டு வனச்சரகத்திற்கு உட்பட்ட வனச்சரகர் செல்வகுமார் தலைமையில் மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.