நித்திரவிளை , பிப்- 9
குமரி மாவட்டம் கிராத்தூர் மருதங்காவிளை பகுதியை சேர்ந்தவர் அகிலா (36). இவருக்கு 16 வருடங்கள் முன்பு தேவராஜ் என்பவருடன் திருமணம் நடந்தது. தேவராஜ் ராணுவத்தில் பணியாற்றி வருகிறார். கடந்த எட்டு வருடங்களுக்கு முன்பு பிரிந்து சென்று விட்டார். அகிலா தனது டோனிகா (15), டேனிகா (9) என்ற இரண்டு பெண் குழந்தைகளுடன் அந்த பகுதியில் ஆஸ்பெஸ்டாஸ் கூரை வீட்டில் தங்கி இருந்து வந்தனர். பிள்ளைகள் அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு மற்றும் ஐந்தாம் வகுப்பு படித்து வருகின்றனர்.
கடந்த மாதம் 27ஆம் தேதி காலை 5 30 மணியளவில் அகிலா தனக்குத்தானே உடலில் தீ வைத்துள்ளார். இதில் தீ மளமளவென பிள்ளைகள் மீதும் பட்டுள்ளது. மூன்று பேரும் குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சிகிச்சை பெற்று வந்தனர். நித்திரவிளை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று மாலையில் அகிலா உயிரிழந்தார். போலீசார் விசாரித்து வருகின்றனர்.