நித்திரவிளை , பிப்-9
கொல்லங்கோடு அருகே ததேயுபுரம் பகுதியை சேர்ந்தவர் அமலதாசன். மீன்பிடி தொழிலாளி இவருக்கு சொந்தமான ஃபைபர் படகை அந்த பகுதியில் உள்ள கடற்கரையில் நிறுத்தி வைத்திருந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் அந்தப் பகுதியில் உள்ள புல் புதர்கள் திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது. அதிலிருந்து பரவிய தீ பைபர் படகிலும் பிடித்துள்ளது.
உடனே பைபர் படகு தீப்பிடித்து எறிய தொடங்கியது. இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் வேகமாக செயல்பட்டு தீயை அணைத்துள்ளனர். எனினும் படகின் பெரும் பகுதி தீயில் எரிந்து நாசமானது. பைபர் படகு தீ பிடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.