வேலூர் 09
வேலூர் மாவட்டம் வேலூரில் வரும் 16ஆம்தேதி நடைபெற இருக்கும் அஇஅதிமுகவின் மண்டல மாநாட்டிற்கு பூமி பூஜை மற்றும் பந்தக்கால் நடும் விழா நடைபெற்றது இதில்
அஇஅதிமுக வேலூர் மாநகர மாவட்ட கழக செயலாளர் எஸ் .ஆர் .கே .அப்பு, இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் மாநிலச் செயலாளர் பரமசிவம் , முன்னாள் அமைச்சர்கள் வீரமணி, ராமச்சந்திரன் ,அக்ரிகிருஷ்ணமூர்த்தி,, சோமசுந்தரம், முக்கூர் சுப்பிரமணியன், சேவூர் ராமச்சந்திரன், வாலாஜாபாத் கணேசன், மற்றும் போளூர் ஆரணி தெற்கு மாவட்ட செயலாளர் ஜெயசுதா முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் லோகநாதன் ,புறநகர் மாவட்டச் செயலாளர் வேலழகன் ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நடைபெற இருக்கும் மண்டல மாநாட்டிற்கு பூமி பூஜை மற்றும் பந்தக்கால் நடும் விழாவினை துவக்கி வைத்தனர். உடன் அஇஅதிமுக இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் பாசறை நிர்வாகிகள், பொதுமக்கள், பலர் கலந்து கொண்டனர்.