சேலம் பனங்காடு ஆண்டிப்பட்டி ஸ்ரீ மாரியம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா!
சேலம் மாவட்டம் பனங்காடு ஆண்டிப்பட்டி கிராமம் அருள் பாலித்துக் கொண்டிருக்கும் ஸ்ரீ மாரியம்மன்,ஸ்ரீ விநாயகர் நவகிரகம் ஆகிய சன்னதிகளுக்கு ஆலய கோபுர விமானம் மற்றும் ஸ்ரீ விநாயகர்,ஸ்ரீ மாரியம்மனுக்கு யாகசாலையில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று பல்வேறு இசை வாத்தியங்கள் முழங்க பிப்.09.காலை 9 மணிக்கு மேல் 10:30 மணிக்குள் மகா கும்பாபிஷேகம் செய்து தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட உள்ளது.பொதுமக்கள் திரளாக கலந்து கொள்ளுமாறு ஆலயத்தின் சார்பில் அழைப்பு விடுத்துள்ளனர். இந்நிகழ்ச்சி ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகம்,கும்பாபிஷேக விழா கமிட்டியார்கள், மற்றும் பனங்காடு ஆண்டிப்பட்டி ஊர் பொதுமக்கள் சிறப்பாக செய்து வருகின்றனர்.