மார்த்தாண்டம், பிப்- 8
மார்தாண்டம் பேரூந்து நிலையம் அருகே மார்தாண்டம் காவல்நிலைய உதவி ஆய்வாளர் இந்து சூடன் தலைமையிலான போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது வேகமாக வந்த டவேரா சொகுசு வாகனத்தை நிறுத்த சைகை காட்டிய போது நிற்காமல் சென்றது. போலீசார் வாகனத்தை சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரம் துரத்தி மடக்கி பிடித்து சோதனை செய்த போது கறுப்பு துணியால் மூடப்பட்ட நிலையில் சிறு சிறு மூட்டை பைகளில் சுமார் இரண்டாயிரம் கிலோ ரேஷன் அரிசி இருப்பதை கண்டு பிடித்ததனர்.
தொடர்ந்து வாகனத்தை ஓட்டி வந்த ஊரம்பு பாலவிளையை சேர்ந்த ஸ்டாலின் (24) மற்றும் உடனிருந்த சிமியோன் (27) ஆகியோரை காவல் நிலையம் கொண்டு விசாரித்த போது ரேஷன் அரிசியை கேரளாவிற்கு கடத்தி சென்றதை ஒப்பு கொண்டனர். தொடர்ந்து குற்றவாளிகள் , அரிசி மற்றும் வாகனத்தை உணவு பாதுகாப்பு காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.அவர்கள் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.