மதுரை பிப்ரவரி 7,
மதுரை திருப்பரங்குன்றம் தைப்பூசத் தெப்பத்திருவிழா தேரோட்டம்
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தைப்பூசத் தெப்பத் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம்ஒ நடைபெற்றது. திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து தரிசனம் செய்தனர். திருவிழாவின் சிறப்பு அம்சங்கள் தைப்பூசத் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக தெப்பத்திருவிழா இன்று நடைபெற உள்ளது. இன்று நடைபெற்ற தேரோட்டத்தில் பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் படித்து இழுத்தனர். திருவிழாவினை முன்னிட்டு தினமும் சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். சிறப்பு அபிஷேகங்கள்: உற்சவர் சன்னதியில் சுப்பிரமணிய சுவாமி தெய்வானை அம்மனுக்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம் திருமஞ்சனம் மஞ்சள் உள்ளிட்ட 16 வகை சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன.
பக்தர்கள் உற்சாகத்துடன் தேரோட்டத்தில் கலந்து கொண்டனர். “வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா”, “வீரவேல் முருகனுக்கு அரோகரா” என்ற பக்தி கோஷங்கள் விண்ணை முட்டின. கோயில் நிர்வாகம் மற்றும் காவலர் திருவிழாவிற்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர்.