சென்னை, பிப் -07,
“கண் சிமிட்டும் நோய்” என்று பெரும்பாலும் குறிப்பிடப்படும் ஹெமிஃபேஷியல் ஸ்பாஸ்ம்
என்பது முகத்தின் ஒரு பக்கத்தில் தன்னிச்சையான பிடிப்புகளை ஏற்படுத்தும் ஒரு பலவீனப்படுத்தும் நரம்பியல் நிலை, இது நோயாளியின் வாழ்க்கைத் தரத்தை கணிசமாக பாதிக்கிறது. இந்நோய் பெரும்பாலும் பல ஆண்டுகளாக கண்டறியப்படாமல் அல்லது தவறான கணிப்பால் கண்டறியப்படாமல் இருந்தது.
கண்சிமிட்டும் நோயால் பாதிக்கப்பட்ட
சவுதி அரேபியா ரியாத்தில் பணிபுரியும் கோளாவை சேர்ந்த கட்டிடப் பொறியாளர் சஜீத் (40) , இவர் வெளிநாட்டு இந்தியர் ஆவார். இவருக்கு 5 ஆண்டுகளுக்கு முன்பு முதல் முறையாக தனது கண் துடிப்பைக் கவனித்தார்.
ஆரம்பத்தில் அவர் தொழில் ரீதியான மன அழுத்தமாக அதைப் புறக்கணித்தார், மேலும் அதுபற்றி அதிகம் சிந்திக்கவில்லை. ஆனால் “துடிப்பு ” அவரது இடது கண்ணிலிருந்து முழு முகத்திற்கும் பரவியது, அது கிட்டத்தட்ட நிலையானதாக மாறியது. கண் இமை துடிப்பு
அவரது வாழ்க்கையையும் தன்னம்பிக்கையையும் பாதிக்கத் தொடங்கியபோது, சிகிச்சை பெற முயற்சியைத் தொடங்கினார். உள்ளூர் மற்றும் சர்வதேச அளவில் பல்வேறு மருத்துவத்தை நாடிய போது தீர்வு ஏதும் எட்டப்படவில்லை.
அவர் சிம்ஸ் மருத்துவமனைக்கு வந்த பின்பு தீர்வு காணப்பட்டது.
சிம்ஸ் மருத்துவர்களால் மூளைக்குச் செல்லும் முக்கிய மண்டை நரம்பு அருகில் இரத்த நாளங்கள் மீது முகநரம்பு மேலே படிந்துள்ளதால் இரத்த அழுத்தம் காரணமாக இக்குறைபாடு கண்டறியப்பட்டு அதற்கான சிகிச்சையளிக்கப்பட்டு குணமாக்கப்பட்டது.