நாகர்கோவில் பிப் 6
கன்னியாகுமரி மாவட்டத்தில் கஞ்சா,குட்கா,புகையிலை போன்ற போதை பொருட்களுக்கு எதிராக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் கடுமையான தொடர் நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்.
இந்நிலையில் மார்த்தாண்டம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது, புகையிலைப்பொருட்கள் விற்பனைக்காக வைத்திருந்த கொல்லன்விளை சார்லஸ் என்பவரின் மகன் ஜெகன் (45) மற்றும் பள்ளியாடி அம்புரோஸ் என்பவரின் மகன் செல்வராஜ்(48) என்பவர்களிடமிருந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த அரசால் தடை செய்யப்பட்ட 8.230 கிலோ கிராம் எடை கொண்ட புகையிலைப்பொருட்களை பறிமுதல் செய்து அவர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
மாவட்டத்தில் தொடர்ச்சியாக கஞ்சா,குட்கா, புகையிலை போன்ற போதை பொருட்கள் விற்பனை செய்யும் குற்றவாளிகள் அதிரடியாக கைது செய்து வருவது குறிப்பிடத்தக்கது.