தஞ்சாவூர் மே 18
தஞ்சாவூர் அரசுமருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதல் முறையாக அறுவை சிகிச்சை இல்லாமல் கேத்லேப் மூலம் பிறவி யிலேயே ஏற்பட்ட இதயகுறை பாட்டுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு ள்ளது.
இதுகுறித்து தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவம னை முதல்வர் பாலாஜி நாதன் செய்தியாளர்களிடம் மேலும் தெரிவித்தது.
.தஞ்சாவூர் அரசு மருத்துவகல்லூ ரி மருத்துவமனையில் பிறவியி லேயே இதய குறைபாட்டால் பாதிக்கப்பட்டவருக்கு அறுவை சிகிச்சை இல்லாமல் கேத்லேப் ( இதய உட்செலுத்தி கதிரியக்க ஆய்வுக்கூடம்) சரி செய்யும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த சிகிச்சை 2 வாரங்களில் 6 பேருக்கு அளிக்கப்பட்டுள்ளது.
முதலில் 3 குழந்தைகளுக்கு பெரிய ரத்த குழாயில் இருந்த குறைபாடு சரி செய்யப்பட்டு, தற்போது மூவரும் நலமாக உள்ளனர். இதே போல் மே 13ஆம் தேதி தலா ஒரு குழந்தை, பெண், ஆண் ஆகிய மூவருக்கும் இதயத் தில் உள்சுவர் இல்லாதது கண்டு பிடிக்கப்பட்டு, கேத் லேப் மூலம் அரை மணி நேரத்தில் சரி செய்யப் பட்டது .இதன் மூலம், பெரிய அறுவை சிகிச்சையை செய்யாமல், குணப்படுத்தப்பட்டது
இந்த சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனையில் ரூபாய் 2.50 லட்சம் முதல் 3 லட்சம் வரை செல வாகும். மேலும் மருத்துவமனை யில் ஒரு வாரம் முதல் 10 நாட்கள் தங்க வேண்டும் .ஆனால், கேத் லேப் சிகிச்சை மூலம் அரை மணி நேரத்தில் சிகிச்சை முடிக்கப்பட்டு, 2 நாள்கள் மட்டுமே மருத்துவ பராமரி ப்பில் இருந்து, விடுவிக்கப்பட்டனர்
இவர்களுக்கு பிறவியிலேயே ஏற்பட்ட இதய குறைபாட்டுக்கு கேத்லேப் மூலம் இயல்பான நிலைக்கு திரும்ப வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதை மேற் கொண் ட இதயவியல் துறைத்தலைவர் ஜெய்சங்கர் உள்ளிட்டோர் கொண்ட மருத்துவக் குழுவினரை பாராட்டு கின்றேன்.
.மேலும் டெங்குவுக்கு 50 படுக்கை கள் கொண்ட தனி வார்டு அமைக்க ப்பட்டுள்ளது. கபசுர குடிநீர், ஓ ஆர் எஸ் கரைசல், மருந்து, மாத்திரை கள் போன்றவை தயாராக உள்ளன என்றார் முதல்வர் பாலாஜி நாதன்.
அப்போது மருத்துவ கண்காணிப் பாளர் ராமசாமி, நிலைய மருத்துவ அலுவலர் செல்வம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்