சிவகங்கை:பிப்:05
சிவகங்கை மாவட்டம் சிவகங்கை நகர் பையூர் பிள்ளைவயல் காளியம்மன் கோவில் மிகவும் பிரசித்திபெற்ற கோவிலாகும்.
கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர். பெரியகருப்பன் அவர்களின் வழிகாட்டலின்படி மிகவும் பழமையான கோவிலின் குடமுழுக்கு விழா வருகின்ற 10 ந்தேதி மிகவும் சிறப்பாக நடைபெற இருக்கின்றது.
அதற்கான விழா அழைப்பிதழை திமுக தலைமைப்பொதுக் குழு உறுப்பினரும் அறங்காவலர் குழு தலைவர்ஏ.ஆர். ஜெயமூர்த்தி அவர்களிடம் விழா அழைப்பிதழை வழங்கினர்.
இந்த நிகழ்ச்சியின்போது பையூர் பிள்ளைவயல் கூடியிருப்போர் நலச்சங்க நிர்வாகிகளான கவுன்சிலர் சி. எல்.சரவணன், சங்கத்தலைவர் எஸ். எம்.பில்டர்ஸ் சுந்தரமாணிக்கம், செயலாளர் எல். ஐ. சி. கர்ணன், துணைத்தலைவர், சேதுபதி, துரைப்பாண்டி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதனிடையே சிவகங்கை மாவட்டம் ஒ. புதூர் அண்ணாநகரில் அமைந்திருக்கும் அருள்மிகு முத்துமாரியம்மன் கோவில் குடமுழுக்கு விழா வருகின்ற 16ந்தேதி நடைபெறுகிறது.
இதற்கான விழா அழைப்பிதழை மாவட்ட திமுக மகளிரணி அமைப்பாளர் பவானி கணேசன் அறங்காவலர் ஏஆர். ஜெயமூர்த்தி அவர்களிடம் வழங்கினார். இந்த நிகழ்ச்சியின் போது விழாக்கமிட்டியினர் உடனிருந்தனர்.