கிருஷ்ணகிரி மாவட்டத்தில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த மூன்று தினங்களுக்கு பலத்தமழை பெய்ய உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளதால் மழையின் போது ஏற்படும் பாதிப்புகளை தடுக்கும் வகையிலும் நெருக்கடியான சூழ்நிலைகளை எதிர்கொள்ள தயார் படுத்திக்கொள்ளும் வகையிலும் பேரிடர் மேலாண்மைக்கான முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் .கே.எம்.சரயு . அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவிக்கும் போது:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அடுத்து 3 தினங்களுக்கு பலத்தமழை பெய்ய உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளதால் மழை பாதிப்புகளை தடுக்கும் பொருட்டு அனைத்து துறை அலுவலர்களும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணிகளை மேற்கொள்ள வேண்டும். மாநகராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் மழைநீர் தேங்குவதை தவிர்க்கும் பொருட்டு கால்வாய்களை துார் வாரவேண்டும். பொதுகட்டிடங்கள் மற்றும் பழமையான கட்டிடங்களின் உறுதி தன்மையை ஆய்வு மேற்கொள்ள வேண்டும். தேசிய நெடுஞ்சாலை மற்றும் மாநில நெடுஞ்சாலைகளின் இருபுறங்களிலும் உள்ள கழிவு நீர் கால்வாய்கள் சுத்தம் செய்து மழை நீர் தேங்குவதை தவிர்க்க வேண்டும். வெள்ள நிவாரண முகாம்கள் அமைக்க தகுதியான இடங்களை தேர்வு செய்து அங்கு குடிநீர், மின்சாரம் மற்றும் பாதுகாப்பு வசதிகள், உணவு, மருத்துவ முகாம் உள்ளிட்ட அத்தியாவசிய பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசுஆரம்ப சுகாதார நிலையங்களில் தேவையான மருத்து மாத்திரைகள் இருப்பு வைத்திருக்க வேண்டும். மழை பெய்யும் காலங்களில் தாழ்வாக உள்ள மின்கம்பிகள், பழுதடைந்த மின்கம்பங்கள் உடனடியாக அப்புறப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அணைகள் மற்றும் ஏரிகளில் உபரி நீர் வெளியேற்றும் மதகுகள் மற்றும் உபரி நீர் வெளியேறும் நீர்வழிப் பாதைகளை ஆய்வு செய்து உபரி நீர் தங்குதடையின்றி செல்லும் வகையில் அடைப்புகளை துார்வாரவேண்டும். மழைகாலங்களில் தாழ்வான உள்ள பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களை பள்ளி வளாகங்களில் பாதுகாப்பாக தங்க வைக்க அனைத்து வட்டாட்சியர்கள் உடனடியாக பள்ளி வளாகங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ள வேண்டும். பலத்த காற்று மற்றும் மழையின்
காரணமாக சாலைகளில் விழும் மரங்களை போக்குவரத்து மற்றும் பொதுமக்களுக்கு பாதிப்புஏற்படாதவாறு உடனடியாக அகற்றுவற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பேரிடர் மீட்பு மற்றும் வெளியேற்றுதல் பணிகளுக்கு தேவையான சாதனங்கள், JCB, மர அறுவை இயந்திரங்கள், வாகனங்கள், மற்றும் அவற்றின் இருப்பிடம் மற்றும் உரிமையாளர் விபரங்கள் தயார் நிலையில் இருப்பதை உறுதி செய்து கொள்ளவேண்டும். அதேப்போல அதிக வெள்ளபெருக்கு ஏற்படும் இடங்களிலும் ஏரி மற்றும் குளங்களின் கரைகளை பாதுகாக்கவும் மணல் மூட்டைகள் இருப்பு வைத்திருக்க வேண்டும்.
டெங்கு போன்ற மழைகால நோய்தொற்றினை தடுக்கும் வகையில் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் உள்ள குடிநீர் தொட்டிகளை சுத்தம் செய்து பாதுகாப்பாக மூடிவைக்க வேண்டும். பொதுமக்கள் தங்கள் சுற்றுபுறங்களில் மழைநீர் தேங்குவதை தடுக்கும் வகையில் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்.
மேலும், பொதுமக்கள் தங்களது அவசர தேவைகளுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டுப்பாட்டு அறை கட்டணமில்லா தொலைபேசி எண்.1077, 04343-234444, மாவட்ட காவல் அலுவலக கட்டுப்பாட்டு அறை எண்.9498181214 மற்றும் தீயணைப்புத்துறை கட்டுப்பாட்டு அறை எண்.101-ஐ அழைத்து தகவல் தெரிவிக்கலாம் 6T601 ஆட்சித்தலைவர் .கே.எம்.சரயு ., அவர்கள் தெரிவித்தார். மாவட்ட
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் நேர்முக உதவியாளர் பொது பொறுப்பு.பன்னீர்செல்வம், கிருஷ்ணகிரி வருவாய் கோட்டாட்சியர் .சீ.பாபு, மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் .ரமேஷ்குமார், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அலுவலர் .பத்மலதா, மாவட்ட ஆட்சியர் நேர்முக உதவியாளர் நிலம்.சுந்தர்ராஜன், மாவட்ட வழங்கல் அலுவலர் .கீதாராணி, துணை இயக்குநர் சுகாதார பணிகள் மரு.ரமேஷ்குமார், உதவி இயக்குநர் ஊராட்சிகள்.மகாதேவன், கிருஷ்ணகிரி துணை காவல் கண்காணிப்பாளர் .தமிழரசி, தனி வட்டாட்சியர் .ஜெய்சங்கர் மற்றும் பொதுப்பணித்துறை, தீயணைப்புத்துறை, வட்டாட்சியர்கள்,
உள்ளிட்ட துறை சார்பாக அலுவலர்கள் உள்ளனர்.