ஈரோடு பிப் 4
ஈரோடு மாவட்ட ஆட்சியர் மற்றும் ஈரோடு மாவட்ட தேர்தல் அதிகாரியுமான ராஜகோபால் சுன்கரா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது
ஈரோடு கிழக்கு தொகுதியில் இறுதி கட்ட பிரச்சாரம் முடிந்த பிறகு தேர்தல் தொடர்பான எந்தவொரு பிரச்சாரமோ, கூட்டமோ நடத்த கூடாது. தொலைக்காட்சி, சினிமா மற்றும் இதர வழிமுறைகளில் தேர்தல் தொடர்பாக எந்த பரப்புரையும் மேற்கொள்ளக்கூடாது. குறுஞ்செய்தி அனுப்புதல் சமூக லைதளங்கள் மூலம் பிரச்சாரம் மேற்கொள்ளுதல் போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது.
ஈரோடு கிழக்கு தொகுதி மக்களைத்தவிர, தேர்தல் பிரச்சாரத்திற்காக வெளியிலிருந்து வந்த நபர்கள் உடனே உடன் தொகுதியை விட்டு வெளியேற வேண்டும். திருமண மண்டபம், சமுதாய கூடம் போன்றவற்றில் வெளிநபர்கள் தங்க வைக்கப்பட்டிருக்க டாது. மேலும், தனியார் தங்கும் விடுதிகள் விருந்தினர் இல்லங்களிலும் வேளிநபர்கள் இல்லாததை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்.
வேட்பாளர்களுக்கு ஏற்கனவே பிரச்சாரத்திற்காக வழங்கப்பட்ட வாகன அனுமதிகள் 3 ந்தேதி மாலை 6.00 மணியுடன் முடிவுக்கு வருகிறது.
வேட்பாளர்களோ, அல்லது அரசியல் கட்சியினரோ, வாக்காளர்களை வாகனம் மூலம் வாக்குச்சாவடிகளுக்கு ஏற்றி வருதல் தண்டனைக்குரிய குற்றம் இது போன்ற செயல்களில் ஈடுபடுதல் கூடாது.
வேட்பாளர்கள் தேர்தல் நாளன்று தேர்தல் பூத் அமைப்பது தொடர்பான வழிகாட்டுதல்கள்
வேட்பாளர்கள் வாக்குச்சாவடி அமைந்துள்ள வளாகத்திலிருந்து 200 மீட்டருக்கு அப்பால் மட்டுமே தற்காலிக தேர்தல் பூத் அமைக்க வேண்டும். ஒரே வாக்குச் சாவடி மையத்தில், ஒன்றுக்கு மேற்பட்ட வாக்குச் சாவடிகள் அமைந்திருந்தாலும், வாக்குச்சாவடி மையத்திலிருந்து 200 மீட்டர் தொலைவுக்கு அப்பால் ஒரு வேட்பாளருக்கு ஒரு தேர்தல் பூத் மட்டுமே இருக்க வேண்டும்.
தேர்தல் பூத் அமைக்க விரும்பும் வேட்பாளர்கள் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி கர்தல் நடத்தும் அலுவலரிடம், பெயர் மற்றும் வாக்குச்சாவடி வரிசை எண் போன்ற விவரங்களுடன் மனு செய்து அனுமதி பெற வேண்டும். மேலும், அந்த தேர்தல் பூத் அமைப்பதற்கு முன்னர் சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் அல்லது உள்ளாட்சி அமைப்புகளிடம் எழுத்துப்பூர்வமான முன் அனுமதி பெற வேண்டும்.
மேலும் தேர்தல் கமிஷன் அறிவித்துள்ள தேர்தல் விதிமுறைகளை அரசியல் கட்சியினர் முழுமையாக கடைபிடிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.