காவேரிப்பட்டணம், பிப்.2-
கிருஷ்ணகிரிமாவட்டம், காவேரிப்பட்டணம் சந்தை பேட்டையில் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட நவீன ஆடு அடிக்கும் தொட்டி பயன்பாட்டு கொண்டு வர வேண்டுமென பொதுமக்கள் எதிர்ப்பார்புடன் உள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் சிறு தொழிலுக்கு பெயர் பெற்ற நகரமாக விளங்கி வருகிறது இந்நகரில் கோவிந்த் செட்டி தெரு, அம்பேத்கர் தெரு பன்னீர்செல்வம் தெரு,
தாம்சன்பேட்டை உள்ளிட்ட மக்கள் நெருக்கம் மிகுந்த சிறு சாலைகள் அமைந்த தெருக்கள் உள்ளது மேலும் இத் தெருக்கல் வழியாக வாகனங்கள் அதிகம் செல்வதால் மாசுகட்டுபாட் எற்படுகிறது. மேலும் காவல் நிலையம் எதிரில் உள்ள தாம்சன் பேட்டை தெருவில் ஆடு மற்றும் கோலி இறச்சி கடைகள் தெருக்களில திறந்த வெளியில் இருப்தா லும், தெருக்களை ஆக்கிரமித்து செயல்பட்டு வருவதாலும் , அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் காலையில் வேலைக்கு செல்லும் போதும், தெருக்களில் நடந்து செல்லும் போதும் திறந்து வெளியில் உள்ள இறச்சிகளில் இருந்து வரும் தூர் நாற்றம்,இறைச்சி கடைகளை சுற்றி ஈக்கள் மொய்பது, நாய்கள் சுற்றுவது உள்ளிட்ட இடர் பாடுகள் ஏற்படுவதால், பொதுமக்கள் பாதிக்கப்படுவதோடு, முகம் சுளிக்கும் சூழ்நிலை ஏற்படுகிறது இது குறித்து சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே
இறைச்சி கடை நடத்தி வருபவர்கள் அனைவரையும் ஒரே இடத்தில் கொண்டு வரும் நோக்கத்தில் காவேரிப்பட்டணம் சந்தப்பேட்டையில் பேரூராட்சியில் 2011-2012ம் ஆண்டு ஒருங்கிணைந்த நகர்புற வளர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் காவேரிப்பட்டணம் வாரச்சந்தையில் நவீன ஆடு அடிக்கும் தொட்டி கட்டப்பட்டுள்ளது.
அவ்வாறு கட்டப்பட்ட நவீன ஆடு அடிக்கும் தொட்டிகட்டப்பட்டு இன்று வரை பொதுமக்கள் பயன்பாட்டு கொண்டு வரப்படவில்லை.
இதுகுறித்து காவேரிப்பட்டணம் பேரூராட்சி நிர்வாகம் மற்றும் உணவுபாதுகாப்பு அலுவலர்கள் உரிய நடவடிக்கை எடுக்காத காரணத்தால் இன்று வரை இறைச்சி விற்போர் ஊருக்குள்ளேயே இறைச்சிகளை விற்று வருகின்றனர். இதனால் பொதுமக்களுக்கும், சுற்றுப்புறச் சூழலுக்கும் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.
ஆகையால் காவேரிப்பட்டணம் பேரூராட்சி நிர்வாகம் மற்றும் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் உரிய நடவடிக்கை எடுத்து உடனடியாக கட்டப்பட்டுள்ள நவீன ஆடு அடிக்கும் தொட்டியினை பயன்பாட்டு கொண்டு வர வேண்டுமென பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
படம்: காவேரிப்பட்டணத்தில் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் கட்டிமுடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வராத நவீன ஆடு அடிக்கும் தொட்டி.