நித்திரவிளை, ஜன- 31
குமரி மாவட்டம் நித்திரவிளை அடுத்த பூத்துறை சுனாமி காலனி பகுதியை சேர்ந்தவர் பிரைஸ்லின் (30). மீனவர். இவர் கலிங்கராஜபுரம் பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கு ரூ. 75 ஆயிரம் கொடுத்துள்ளார். பின்னர் இந்த பணத்தை திருப்பி கேட்டுள்ளார். இதில் அந்த பெண்ணுக்கும் பிரைசிலினுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தை கலிங்கராஜபுரம் பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் ராகுல் (34) என்பவரிடம் அந்தப் பெண் கூறி உள்ளார். இந்த நிலையில் சம்பவ தினம் மாலை பிரைசிலின் கலிங்கராஜபுரம் படிப்பகம் பகுதியில் நின்று கொண்டிருந்தபோது, அங்கு வந்த ராகுல் தகாத வார்த்தைகள் பேசி கம்பியால் அவரை சரமாரியாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
இதில் பலத்த காயம் அடைந்த பிரைசிலின் குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்த புகாரின் பேரில் நித்திரவிளை போலீசார் வழக்கு பதிவு செய்து ராகுலை கைது செய்தனர்.