திண்டுக்கல்லில் உழைக்கும் மக்கள் கூட்டமைப்பு சார்பில் அனைத்து இந்திய கருத்து பரப்புரை பிரச்சாரம்.
உழைக்கும் மக்கள் கூட்டமைப்பு சார்பில் அனைத்து இந்திய கருத்து பரப்புரை பிரச்சார நிகழ்ச்சி
திண்டுக்கல்லில் உள்ள தோமா அருள்பணி மையம் சூசையப்பர் கோவில் வளாகத்தில் நடைபெற்றது.
இப்பரப்புரை பிரச்சாரத்திற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளரும் ,உழைக்கும் மக்கள் கூட்டமைப்பின் தலைவருமான அருள் முனைவர் சோ.பிலிப் சுதாகர் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக திண்டுக்கல் பாராளுமன்ற உறுப்பினர் ஆர். சச்சிதானந்தம் கலந்து கொண்டு
பிரச்சாரத்தை துவங்கி வைத்து சிறப்புரையாற்றினார். சிபிஎம் மாவட்ட செயலாளர் கே.பிரபாகரன், சிஐடியு மாவட்ட செயலாளர் சி.பி.ஜெயசீலன்,எஐடியுசி மாவட்ட செயலாளர் பாலன்,டிஆர்எல் எம் சிடியு மாவட்ட செயலாளர் பி.சிவ முருகேசன், வீட்டு வேலை தொழிலாளர் சங்க முன்னாள் மாநில தலைவர் கே.சீதாலட்சுமி, வேடசந்தூர் தொழிலாளர் ஆதரவு குழு கூட்டமைப்பு தலைவர் துலாம் ச. கோபிகண்ணன், செயலாளர் எஸ். மாணிக்க ஈஸ்வரி, நிலக்கோட்டை தொழிலாளர் ஆதரவு குழு வி.தங்கபாண்டியம்மாள் ஆகியோர் கருத்துரையிலும் கீழ்க்கண்ட கோரிக்கைகள் ஒன்றிய அரசு மற்றும் மாநில அரசியிடம் வழங்குவது முடிவு செய்யப்பட்டது.
உழைக்கும் தொழிலாளர் அனைவருக்கும் மருத்துவ காப்பீடு இ. எஸ். ஐ. வழங்கிட வேண்டும் எனவும்,
பணித்தளத்தில் பணி பாதுகாப்பும் உடல் ஆரோக்கியத்தையும் உறுதி செய்திடவும், புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கும் அனைத்து அமைப்புசாரா தொழிலாளர்களுக்கும் வாழ்வதற்கான இருப்பிடத்தை உறுதி செய்திடவும் , தொழிலாளர் நலவாரிய இணையதளத்தை உடனடியாக சரி செய்திட வேண்டும், டெக்ஸ் மற்றும் பஸ் பாடி கட்டும் தொழிலாளர்களுக்கு வாழ்வதற்கான ஊதியம் வழங்கிட உறுதி செய்ய வேண்டும், கட்டுமானம் அமைப்பு சாரா மற்றும் உடல் உழைப்பு தொழிலாளர்களுக்கு நிர்ணயித்த குறைந்தபட்ச ஊதியத்தை வழங்கிட மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், மத்திய அரசின் ஈ. ஷாம்திட்டத்தில் பதிவு செய்த தொழிலாளர்களுக்கு தொழிலாளி பங்கிற்கு மத்திய அரசை பொறுப்பு எடுத்து சமூக பாதுகாப்பு உறுதி செய்திட வேண்டும், தூய்மை பணியாளர்களுக்கு சமூக அந்தஸ்து பொருளாதார முன்னேற்றத்திற்கு தீவிர முயற்சி எடுக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தொழிலாளர்கள் மற்றும் தொழிற்சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.நிகழ்ச்சியின்
முடிவில் 2-வது மாமன்ற உறுப்பினர் கணேசன் நன்றி கூறினார்.