ஈரோடு பிப். 2
உழைக்கும் மக்கள் கூட்டமைப்பு சார்பில் அனைத்து இந்திய கருத்து பரப்புரை விளக்க கூட்டம் பெருந்துறை தொண்டு மற்றும் கல்வி அறக்கட்டளை வளாகத்தில் மாநில பொது செயலாளர் செல்ல. செல்வகுமார் தலைமையில் நடைபெற்றது.அமைப்பு சாரா பொது தொழிலாளர்கள் நல சங்க மாவட்ட தலைவர் தங்க வேல் வரவேற்றார்.
இதில் தேசிய செயற் குழு உறுப்பினர் சாமி இதில் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார் . ஏ ஐ டி யு சி மாநில செயலாளர் சின்னசாமி இந்திய குடியரசு தொழிற்சங்க ஈரோடு மாவட்ட தலைவர் மோகன் ராஜ் டி சி டி யு ஐ.என்.டி.யு.சி. மாநில தலைவர் குளம் ராஜேந்திரன் பகுஜன் சமாஜ் கட்டிட மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர் நல சங்க தலைவர் ராஜா கார்மென்டஸ் பொது தொழிலாளர் சங்க செயலாளர் ஜானகி சமூக ஆர்வலர்கள் சௌம்யா ஜெகன் ராஜ் மற்றும் விக்டர் பால் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்.
ஈரோடு மாவட்ட செயலாளர் ரேவதி நன்றி கூறினார்.
அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு இ எஸ் ஐ உரிமைகளை வழங்க வேண்டும்.அமைப்பு சாரா தொழிலாளர்கள் அனைவருக்கும் தேசிய காப்பீடு சமூக பாதுகாப்பு பயன்கள் மற்றும் அவர்களுக்கான வாழ்வாதாரத்தை உறுதிப் படுத்த வேண்டும்.
அனைத்து அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கும் அவர்கள் வாழ்நிலைக்கேற்ற நியாயமான குறைந்த பட்ச ஊதியத்தை வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.