பூதப்பாண்டி – ஜனவரி -30 –
பூதப்பாண்டி பூதலிங்க சுவாமி சிவகாமி அம்பாள் கோவிலில் நடைபெறும் தை பெரும் தேர் திருவிழாவை முன்னிட்டு பிப் 2-ம் தேதி ஞாயிற்றுகிழமை காலை 4.00 மணிக்கு கணபதி ஹோமமும், காலை 5.00 மணிக்கு நினைத்ததை முடிக்கும் விநாயகருக்கும், ஸ்ரீ பூதநாதருக்கும், சுவாமிக்கும் அம்பாளுக்கும் சிறப்பு அபிஷேக தீபாராதனையும் அதனை தொடர்ந்து காலை 7.45 மணிக்கு மேல் 8.45 மணிக்குள் திருக்கொடியேற்றம் நிகழ்ச்சியும், காலை 9.00 மணிக்கு சிற்றுண்டி விருந்தும் (அன்னதானம்) நடைபெறுகிறது மாலை 5.00 மணிக்கு மங்கள இசையும் இரவு 7.00 மணிக்குநடன நாட்டிய நிகழ்ச்சியும் இரவு 9.00 மணிக்கு பக்தி மெல்லிசை விருந்தும் அதன் பிறகு சுவாமியும் அம்பாளும் பூங்கோவில் வாகனத்தில் பவனி வருதல் நிகழ்ச்சியும் நடக்கிறது பத்து நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் தினமும் காலையில் பூஜைகளும் மாலை மற்றும் இரவு நேரங்களில் சமய சொற்பொழிவு, பக்தி மெல்லிசை,கலை நிகழ்ச்சிகள், பட்டிமன்றம் மற்றும் ரதவீதிகளில் வாகன ஊர்வலங்கள் போன்றவைகள் நடைபெறும், 9-ம் திருவிழாவான 10-ம் தேதி (திங்கள்கிழமை) காலை 9.30 மணி முதல் 10.30 மணிக்குள் திருத்தேர்களில் ஸ்ரீ விநாயகரையும், சுவாமியையும், அம்பாளை யும் எழுந்தருள செய்து திருத்தேர் வடம் தொட்டு இழுத்தல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சி தலைவர் அழகு மீனா, மேயர் மகேஷ், விஜய் வசந்த் எம்.பி. தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ.மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின், பூதப்பாண்டி பேரூராட்சி தலைவர் ஆலிவர் தாஸ் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பிக்கிறார்கள் மாலை 5.00 மணிக்கு சமய சொற்பொழிவு நிகழ்ச்சியும், இரவு 7.00 மணிக்கு பக்தி மெல்லிசை விருந்தும், இரவு 9.00 மணிக்கு சுவாமியும் அம்பாளும் வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வருதல் நிகழ்ச்சியும் இரவு 10.00 மணிக்கு சப்தா வர்ணம் நிகழ்ச்சியும் நடக்கிறது. 10-ம் திருவிழாவான செவ்வாய்கிழமை (11-02-25) அன்று காலை 10.00 மணிக்கு சுவாமிக்கும் அம்பாளு க்கும் சிறப்பு அபிஷேக ஆராதனையும், மாலை 5.00 மணிக்கு சமய சொற்பொழிவு நிகழ்ச்சியும், மாலை 6.00 மணிக்கு ஆராட்டு வைபோகமும், 7.00 மணிக்கு சிறப்பு பக்தி மெல்லிசையும், இரவு 9.00 மணிக்கு ஸ்ரீ கன்னிவிநாயகர், தூத்து வாரி அம்மன் கோவிலிலிருந்து சுவாமியும் அம்பாளும் தெப்போற்சவத்திற்க்கு புறப்படுதல் நிகழ்ச்சியும் இரவு 10.00 மணிக்கு தெப்ப உற்சவம் நிகழ்ச்சியும் நடக்கிறது விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறையினரும், பக்தர்கள் பேரவையினரும், விழா கமிட்டியினரும் செய்து வருகிறார்கள்.